அசைந்தாடும் கவர்ச்சிப் படகுகள்!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

நடுப்பக்க ராய் லட்சுமியின் வெயிட்டான வெள்ளை மனசை கண்டு வெறிச்சிப் போயிட்டோம்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

புகை பிடிப்பதில் ஒரு காலத்தில் ஸ்டைல் காட்டிய ரஜினியுடைய ரசிகர்கள், இப்போது புகைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

இருபது ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு முழுநேர நடிகராகி இருக்கும் ‘தொண்டன்’ முருகவேலுக்கு, இருபது படங்கள் கைவசம் இருப்பது ‘முயற்சியுடையோர் இகழ்ச்சி அடையார்’ என்கிற முதுமொழிக்கு உரம் சேர்க்கிறது.
- எம்.சேவுகப் பெருமாள், பெருமகளூர்.

‘சரோஜாதேவி பதில்கள்’ பகுதியில் தக்காளிப் பழங்களுக்கு இடையே தங்கச்சிலையை அமரவைத்து என் இதயத்தை தகதகக்க வைத்து விட்டீர்கள்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

சாந்திமுகூர்த்தம் பற்றிய சத்தியநாராயணனின் கேள்வி குறும்பு என்றால், அதற்கு சரோஜாதேவி கொடுத்த பதில் குளுகுளு.
- கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

ஆனந்தத் தண்டனை அனுபவிக்க அமைந்த அசத்தல் சிறை. கவர்ச்சிப் படகுகள் அசைந்தாடும் உசுப்பும் மதர்ப்புத்துறை. வெள்ளியே துள்ளவைத்து கள்ளக்கலை பயிலவைக்கும் எங்கள் ‘வண்ணத்திரை’.
- கவிஞர் கவிக்குமரன், சென்னை-99.

திரைப்படத்துக்கான விமர்சனம் என்பது வெறும் பாராட்டுரையாகவோ, அல்லது வன்மமாக வசவு செய்வதாகவோ இருக்கக்கூடாது என்கிற இலக்கணத்துக்கு ஏற்ப அமைந்தது ‘வண்ணத்திரை’யின் ‘விவேகம்’ விமர்சனம்.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.