டப்பிங் ஸ்டார்:‘தங்கல்’ ஷங்கர்!



அமீர்கானின் ‘தங்கல்’ படத்தை தமிழில் பேசவைத்தவர் ஷங்கர்.‘‘எங்க அப்பா ஜெகதீசன் நாடக நடிகராக இருந்தவர். என்னோட சின்ன வயசில இருந்தே என்னோட சித்தப்பாவோடு டப்பிங் ஸ்டூடியோஸ் போய்ப் போய் இந்தத் துறை மீது ஆர்வம் வந்தது. கன்னடம் டு தமிழ்ல 200 படங்கள்ல ஒர்க் பண்ணியிருக்கேன். தூர்தர்ஷன் சீரியல்கள் நிறைய பண்ணிக் குடுத்திருக்கேன்.

ஸ்ரீலங்கா டி.வி.சேனலுக்காக ‘லகான்’ படத்தை மொழிமாற்றம் பண்ணினேன். அதோட ஒர்க் பார்த்து அங்கே உள்ள சேனல் ஓனர் ராஜ் மகேந்திரா இம்ப்ரஸ் ஆனார். தயாரிப்பாளர் சுரேஷ்பாலாஜி மூலமா லங்கா போய், தொடர்ந்து அங்கேயே படங்கள் டப் பண்றதுக்கான பேச்சு வார்த்தை நடந்தது. ஆனா, அதற்குள் இங்கே நான் பிசியானதால அங்கே போக முடியலை.

‘dungeons & dragons’ல இருந்துதான் என் கேரியர் தொடங்குச்சு. தொடர்ந்து  ‘பைரேட்ஸ் ஆஃப் கரிபியன்’, ‘கார்டியன்ஸ் ஆஃப் த கேலக்ஸி’னு நிறைய ஆங்கிலப் படங்களை தமிழில் டப் பண்ணினேன். ‘தங்கல்’ வாய்ப்பு வந்தது எதிர்பாராதது. அதோட தெலுங்கு ரைட்டர் எம்.வி.சத்யநாராயணா சார் மூலமா ‘தங்கல்’ கிடைச்சது. இதை தமிழில் பார்த்துட்டு டப்பிங் துறையின் பிதாமகரான ஆரூர்தாஸ் சார் ரொம்ப நேரம் பாராட்டினார்” என்கிறார் ஷங்கர்.