டப்பிங் ஸ்டார்:‘டைட்டானிக்’ மோகன்!



‘டைட்டானிக்’கை தமிழில் பேசவைத்த பெருமைக்குரியவர் மோகன் தேவநாராயணன்.‘‘இந்தியாவிலேயே முதல் முழு நீள டப்பிங் படத்துக்கு வசனம் எழுதிய பெருமை எங்க தாத்தா குளத்து ஐயருக்கு உண்டு. ஏவி.மெய்யப்ப செட்டியார் தயாரித்த இந்திப் படமான ‘ராமராஜ்யம்’ படத்தை தமிழில் டப் செய்தவர் அவர்தான். மகாத்மா காந்தி பார்த்த ஒரே படம் அதுன்னு சொல்லுவாங்க.

எங்க அப்பா தேவநாராயணனும் ரைட்டர் தான். கமல் சார் தெலுங்கில் நடித்த ‘சலங்கை ஒலி’, ‘சிப்பிக்குள்முத்து’னு பெரும்பாலான படங்களை தமிழில் டப் பண்ணினது அவர்தான். என்னோட அஞ்சு வயசிலேயே டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா கேரியர் தொடங்குச்சு. ராமானந்த சாகரின் சீரியல்கள் எல்லாவற்றுக்கும் வசனம் எழுதியிருக்கேன்.

‘டைட்டானிக்’, ‘மம்மி’, ‘அனகோன்டா’னு என்னோட லிஸ்ட் அதிகம். டி.வி.சேனல்களுக்காக 80 படங்கள் பண்ணியிருக்கேன். ‘மிஸ்டர் வேதாந்தம்’ என்ற டி.வி. தொடரில் ஹீரோவா நடிச்சு, டப்பிங்கும் பேசியிருப்பேன். டப்பிங் யூனியனில் எனக்கு ‘எழுத்துச் செல்வம்’ என்ற பட்டமும் வழங்கியுள்ளனர்’’ என்கிறார் மோகன் தேவநாராயணன்.