டப்பிங் ஸ்டார்:‘அபோகலிப்டோ’ ராஜா!



“எங்க அப்பா இந்தத் துறையில இருந்தாங்க. அதனால நானும் வந்துட்டேன். என்னோட 20 வயசில ஒரு வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட்டா ஆரம்பிச்சேன். பிறகு டப்பிங் கோ-ஆர்டினேட்டர். அப்புறமாதான் வசனகர்த்தா. 800 ஆங்கிலப் படங்களுக்கு மேல ஒர்க் பண்ணிட்டேன். ஜாக்கிசான், டோனிஜா படங்கள்தான் அதிகம். சன் டிவிக்காக நிறைய ஆங்கிலப் படங்கள் மொழிமாற்றம் பண்ணியிருக்கேன். அதில் ‘மிசஸ் டவுட் ஃபயர்’, ‘ஷாகி டாக்’, ‘அபகலிப்டோ’னு நிறைய படங்கள்.

‘அபகலிப்டோ’ நேரடியாக தமிழ்ல முதல்ல வரலை. சன் டி.வி.க்காக நான் பண்ணினதையே தியேட்டரிலும் ரிலீஸ் பண்ணினாங்க. சுட்டி டி.வி.ஆரம்பிச்ச அன்னில இருந்து இன்னிக்கு வரை 12 வருஷமா ‘ஜாக்கிசான்’ கார்ட்டூன் சேனல் எழுதிட்டிருக்கேன். ‘வருத்தப்படாத கரடி சங்கம்’ செம ஹிட்.

‘நாகினி’ சீரியல் ஒரிஜனல் மேக் மாதிரியே இருந்ததுன்னு எக்கச்சக்க பாராட்டு. ‘ஜெய் அனுமான்’ பண்றேன். சீரியலுக்கு பண்ற ஒர்க் தான் எப்பவும் கவனிக்கப்படும். இப்போ ‘ஸ்டூடியோ வேல்’னு சொந்தமா ஸ்டூடியோ ஆரம்பிச்சிருக்கேன். தெலுங்கு, ஆங்கிலப் படங்கள் ஒர்க் அடுத்தடுத்து போயிட்டிருக்கு.’’ என்கிறார் இ.எம்.எஸ்.ராஜா.