மடிப்புகளும், வளைவுகளும்!



வனப்பும், செழிப்புமாக வண்ணத்திரையில் ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கவர்ச்சித் தாரகைகளின் food and diet secrets ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது. ஹீரோயினோ அல்லது அயிட்டம் டான்ஸரோ... அவரவருடைய கட்டான உடல்தான் திரைத்துறையில் அவர்களுக்கான சாவி. சமீபமாக நம்மை கனவுகளில் பாடாய்படுத்தும் மடிப்புகளுக்கும், வளைவுகளுக்குமான பியூட்டி சீக்ரட் ஒர்க்அவுட்ஸ் என்னவென்று பார்ப்போமா?

* மணிரத்னத்தின் கண்டுபிடிப்பான அதிதி ராவ் ஹைதரி. பிகினி காஸ்ட்யூமுக்கு ஏற்ப உடலை பராமரிப்பவர். ‘‘எனக்கு ரன்னிங் பிடிக்காது. ஐ லவ் யோகா அண்ட் டான்ஸிங்’ என சிலிர்க்கும் அதிதி, ‘‘என்னோட அஞ்சு வயசில இருந்து நான் டான்ஸ் ஆடுறேன். அதனாலதான் எனக்கு இன்னும் ஃப்ளக்ஸிபிளான உடம்பு இருக்கு. My body is used to exercise, so it constantly needs something new’’ என சொல்லும் அதிதி களரி கலையிலும் எக்ஸ்பர்ட்.

* அனுஷ்கானாலே யோகாதானே? ‘இஞ்சி இடுப்பழகி’ ஷூட்டிங் முடித்து விட்டு ஐந்து கிலோ எடைக் குறைப்பு செய்தபின் ‘பாகுபலி2’ படப்பிடிப்பிற்கு வந்தார் அனுஷ்கா. அதிர்ந்த ராஜமௌலி, ‘‘இன்னும் பதினைந்து கிலோ எடையைக் குறைங்க’’ என கண்டிப்புடன் சொல்ல, தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் இரண்டு இரண்டு மணி நேரங்கள் மெனக்கெட்டு எக்ஸர்சைஸ் செய்தபிறகே 17 கிலோ எடையைக் குறைத்து ஷூட்டிங்கில் பங்கேற்றார் அனுஷ்கா. யோகாவை பார்ட் டைம் ஆகவும், எக்ஸர்சைஸை ஃபுல் டைமாகவும் ஒர்க் அவுட் செய்தே, இப்போதுள்ள லுக்கில் இருக்கிறார் அனுஷ்கா.

* ‘இது நம்ம ஆளு’வில் ‘மாமன் வெயிட்டிங்...’ பாடலில் குத்தாட்டம் போட்ட டோலிவுட் ஸ்லிம் பியூட்டி அடா ஷர்மா. யோகா, ஜிம்னாஸ்டிக் என பிச்சு உதறும் அடா, ‘ஆக்ட்ரஸுக்கு கடுமையான எக்ஸர்சைஸ் மட்டும் போதாது. நல்ல அருமையான தூக்கமும் அவசியம். அப்போதுதான் கண்கள் வொயிட் ஃப்ரெஷ்ஷில் மின்னும்’’ என ஹெல்த் டிப்ஸும் தருகிறார்.

* பேட்மின்டனில் ஸ்டேட் லெவல் ப்ளேயராக இருந்தவர் தீபிகா படுகோன். அதனாலேயே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் வித்தை தெரிந்தவர். ‘I do regular exercise, yoga, eat healthy and positive thinking is what makes me look good’ என சொல்லும் தீபிகா, அதிகாலை ஆறு மணிக்கே எழுந்து யோகா, ரன்னிங்கை தொடங்கிவிடுகிறார். அவரது ஃபிட்னஸ் டிரெயினர் யாஸ்மின் வழிகாட்டுதல்படி, இப்போது pilates, stretching உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் தீபிகா.

* வெயிட் லிப்டிங் போன்ற கடுமையான பயிற்சிகளில் எல்லாம் ஹன்சிகாவிற்கு ஆர்வம் இல்லை. கொஞ்சம் யோகா, கொஞ்சம் ஜாக்கிங்குடன்தான் ஹன்சியின் அதிகாலை துவங்குகிறது. ரெகுலர் யோகாவிற்குப் பிறகு ஸ்பின்னிங் ஒரு நாள்... ஸ்விம்மிங் மறுநாள் என்பது ஹன்சியின் ஒர்க் அவுட் ஷெட்யூல்.

*‘‘தினமும் அரைமணி நேரமாவது எக்ஸர்சைஸ் பண்ணுங்க. உங்க மனமும் உடலும் செம ஃப்ரெஷ் ஆகிடும்’’ என்பது காஜல் அகர்வாலின் கணக்கு! காற்றோட்டமான இடத்தில் யோகாவுடன் அன்றைய நாளைத்  துவங்கும் காஜல், அதன் பிறகு ஜிம் ஒர்க் அவுட்; பிறகே வெளியே கிளம்புகிறார். ‘‘Yoga is the journey of self, through the self, to the self!’’ என பூரிக்கிறார் காஜல்.

* தினமும் 45 நிமிடங்கள் யோகா கட்டாயம் என்ற கொள்கை வைத்திருக்கிறார் பாலிவுட் குயின் கங்கணா ரனாவத், அவரது ஃபிட்னஸ் ட்ரெயினர் லீனா மோக்ரெயின் வழிகாட்டுதல்படி வாரத்தில் ஐந்து நாட்கள் ஜிம்மிற்கு செல்கிறார். இன்டர்வெல் டிரெயினிங், கார்டியோ ஒர்க் அவுட்ஸ், புல்அப்ஸ், - புஷ்அப்ஸ், ஸ்ட்ரென்ங்த் டிரெயினிங் என வகையாய் பிரித்து ஒவ்வொரு நாளும் பார்ட் பார்ட் ஆக ஒர்க் அவுட் செய்வது கங்கணாவுக்கு பிடித்தமானது!

* சிக்ஸ்பேக் வைத்த ஹீரோயின்களில் மந்த்ராபேடியும் ஒருவர். ‘‘குழந்தை பெத்தபிறகு மந்த்ரா, சிக்னு செம ஸ்ட்ரக்சரா இருக்காங்களே.. பழைய உடம்ப கொண்டு வந்துட்டாங்ளே!’’ என மந்த்ராவைப் பார்த்து பாலிவுட் அடிக்கடி ஆச்சரியப்படுகிறது. ‘‘சரியான நேரத்துல சரியான உணவுகளைச் சாப்பிடுவதால் கூட உடல் வடிவம் மெருகேறும்.. Exercise is my greatest stress buster’’ என்கிறார் இருபது கிலோ தம்பிள்ஸை கையில் ஏந்தியபடி!

* அமலாபாலின் கைவசம் அரை டஜன் படங்கள் இருப்பதால், ஷூட்டிங் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தினமும் வியர்க்க விறுவிறுக்க ஜிம்மில் வாசம் உண்டு. சில படங்களில் நியூ  லுக், எடை குறைப்பு தேவை என்றால் ஜிம் ட்ரைனர் உதவியுடன் களத்தில் இறங்குவது அமலாபாலின் ஸ்டைல்!

* ‘முகமூடி’யில் டல்மேக்கப், ஹோம்லி கேர்ளாக வந்த பூஜா ஹெக்டே, பாலிவுட்டிலும் டோலிவுட்டிலும் ஜீரோ சைஸ் உடலழகில் க்ளாமரில் பின்னுகிறார். பாக்ஸிங், பைலேட்ஸ், ஏரியல் சில்க், வெயிட் டிரெயினிங், தலைகீழாக ஒர்க் செய்வது என நிஜமாகவே கடும் ‘ஜிம்’மாளி பொண்ணு பூஜா. ‘ஜிம் சாம்பியன்’ என டோலிவுட்டில் பூஜாவுக்கு செல்லப்பெயரும் உண்டு.

* பிரியங்கா சோப்ராவிற்கு செக்ஸி ஃபிகர் என்ற செல்லப்பெயர் உண்டு. பிரியங்காவின் ஒர்க் அவுட் மிக மிக டஃப் ஆனது. தினமும் காலை ட்ரெட் மில்லில் பதினைந்து நிமிட நடைப் பயிற்சி, கொஞ்சம் யோகாவுடன் அன்றைய நாளைத் துவக்கும் பிரியங்கா, அதன் பிறகு 20-25 பென்ச் ஜம்ப்ஸ், ரிவர்ஸ் க்ரன்சஸ், லைட் வெயிட்ஸ், ஓவர் வெயிட்டிங் என கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வதுண்டு. இடைஇடையே நீச்சல் பயிற்சியும் டான்ஸ் ப்ராக்டீஸும் பண்ணுவது பிரியங்காவின் அடிஷனல் ஹாபி.

* கன்னடத்து கல்கண்டு ராகினி திரிவேதியை தமிழில் ‘நிமிர்ந்து நில்’ படத்தில் பார்த்திருப்பீர்கள். கடுமையான உடற்பயிற்சியின் மூலம் கணிசமாக உடல் எடையைக் குறைத்துள்ள ராகினி, ஜிம் லவ்வராகிவிட்டார். இப்போது பெங்களூருவில் உள்ள தன் வீட்டில் மினி ஜிம்மில் ஒர்க் அவுட்டை தொடர்கிறார்.

* டோலிவுட் அரபிக் குதிரை ரகுல் ப்ரீத் சிங், உண்மையில் ஒரு பிசிக்கல் ஆக்டிவிட்டி லவ்வர். ஸ்போர்ட்ஸ் சாம்பியன், ஹார்ஸ் ரைடிங், கோல்ஃப் பிளேயர் என எகிறும் திசையெல்லாம் ஃபிட்னஸ் காட்டுகிறார். வாரத்தில் ஆறு நாட்கள் ஜிம் செல்வது கட்டாயம் என பாலிஸி வைத்திருப்பவர். ‘‘ரெண்டு மூணு நாள் ஜிம் பக்கம் போகலைனா கூட அன்னிக்கு முழுவதும் மந்தமா ஒரு இன்கம்ப்ளீட் டே மாதிரி தோணும்’’ என ஃபீல் ஆகிறார் ரகுல்.

* சில வருடங்களுக்கு முன்னர் இரண்டே மாதத்தில் பதினைந்து கிலோ எடையைக் குறைத்து ஆச்சர்யம் காட்டியவர் ராய்லட்சுமி. ‘‘Fitness is my new lifestyle’’ என சொல்லும் ராய், ‘எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து 21 நாட்கள் செய்து வந்தால் அது ஒரு பழக்கமாக மாறிவிடும். அதான் 21 day habbit’’ என்கிறார். இப்போது ஜிம், ஸ்விம்மிங் தவிர, சைக்கிளிங்கும் பழகிவிட்டார் ஜரூராக!

* சைக்கிளிங் அண்ட் ஸர்ஃப்பிங் என்றால் ரெஜினா கஸாண்ட்ராவிற்கு அத்தனை இஷ்டம். சமீபத்தில் கூட கர்நூலிலிருந்து ஹைதராபாத் வரை 150 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளிங் சென்று வந்திருந்தார். டிரெயினரின் மேற்பார்வையில் ஒர்க் அவுட் செய்வதுதான் சிறந்த பயிற்சி என்பது ரெஜியின் பாலிஸி. உடம்பின் மேல்பாதி முழுவதும் ஒரு நாள் ஒர்க் அவுட் என்றால், மறுநாள் கீழ்பாதி முழுவதும் கவனம் செலுத்துவது உண்டு. வாரத்தில் மூன்று நாட்களாவது ஜிம்மிற்கு கட்டாயம் சென்று வருவதே ரெஜினாவின் வழக்கம்.

* நிக்கி கல்ராணியின் அக்கா சஞ்சனா கல்ராணி இப்போது பெங்களூரில் யோகா ஸ்கூல் ஆரம்பித்திருக்கிறார். அவரே யோகா, ஃபிட்னஸ் மாஸ்டராக இருப்பதால், நிக்கியின் ஃபிட்னஸ் டிரெயினராக புரொமோஷன் ஆகியிருக்கிறார் சஞ்சனா.

* தினமும் இரண்டு விதமான யோகாவைக் கடைப்பிடிக்கிறார் ஸ்ரேயா. காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் 45 நிமிடங்கள் ஜிம்மில் தடதடக்குது பொண்ணு. இரவு உணவை எட்டு மணிக்குள் சாப்பிட்டுவிடும் ஸ்ரேயா, வாரத்தில் சில நாட்கள் டான்ஸ் ப்ராக்டீஸ், நீச்சல் கட்டாயம் என தன் லிஸ்ட்டில் வைத்துள்ளார்.

* ஸ்ருதிஹாசன் ஒரு ஜிம் ரசிகை. கடினமான ஒர்க் அவுட்களை சில நேரங்களில் மேற்கொள்ளும் ஸ்ருதி, தினமும் ட்ரெட்மில்லில் ஓடுகிறார். பின்னர் லைட்டான கார்டியோ பயிற்சிகளையும் மேற்கொள்கிறார். இதைவிட சிறந்த எக்ஸர்சைஸாக, தனது ஃபேவரிட் பாடல்களை ஓடவிட்டு, வியர்க்க விறுவிறுக்க டான்ஸ் ப்ராக்டீஸை ஒரு எக்ஸர்சைஸாகவே நினைத்து ஒர்க் அவுட் செய்யுது பொண்ணு!

* ‘லிங்கா’ பொண்ணு சோனாக்‌ஷி சின்ஹாவின் ஃபிட்னஸில் முதலிடம் வகிப்பது  நீச்சல். சில வருடங்களுக்கு முன்னால் சதைப்பிடிப்பாக இருந்த சோனாக்‌ஷி, சில மாத ஜிம் வாசத்திற்குப் பின் தேவையில்லாத சதைகளை எல்லாம் குறைத்தே, ‘லிங்கா’ வந்தார். உடம்பை பார்ட் பார்ட்டாகப் பிரித்து அதற்கான ஒர்க் அவுட்டை தொடர்வது சோனாக்‌ஷியின் கட்டழகு ரகசியம்.

* நிஜமாகவே தமன்னா ஒரு ஜிம் பொண்ணு. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஃபிட்னஸ் கருவிகள் எதுவும் இல்லாமல் கூட தினமும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சிகளை கடைப்பிடிக்கிறார் தமன்னா. கடுமையான டயட்டும் ஃபாலோ பண்ணும் தமன்னா, தினமும் அரை மணி நேரமாவது டான்ஸ் ப்ராக்டீஸும் தொடர்கிறார்.

* டாப்ஸி ஒரு gym freak பொண்ணு. இந்திப் படத்திற்காக ஃபிரன்ச் மார்ஷியல் ஸ்டன்ட்மேன் ஒருவரிடமிருந்து தற்காப்புக்கலைகளைப் பயின்ற டாப்ஸி, பின்னர் அதிலேயே பல பெல்ட்டுகளை வாங்கிக் குவித்தார். ஜிம்மிற்குச் சென்றால் ஒவ்வொரு நாளும் பல வகையான ஒர்க் அவுட்கள் பண்ணுவது அவரது ஸ்டைல்.

தொகுப்பு : மை.பாரதிராஜா