திட்டிவாசல்



காதல், வீரம் பேசும் காதலன்

திட்டிவாசல் என்றால் ஜெயில், கோயில் போன்ற இடங்களில் இருக்கும் பெரிய கதவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறிய கதவு ஆகும். கேரளா, தமிழ்நாடு எல்லையில் இருக்கிறது முள்ளம்பாறை மலை கிராமம். கார்ப்பரேட் கம்பெனிகளின் பேராசைக்கு அந்த மலைக்கிராம மக்கள் எப்படி பலியாகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. மகேந்திரன், வினோத் கின்னி என இரண்டு நாயகர்கள் படத்தில். அவர்களுக்கு தனு ஷெட்டி யும், ஐஸ்வர்யாவும் முறையே ஜோடிகள். மண்ணுக்காகப் போராடும் அதே வேளையில் காதலிக்கும் வேலையையும் இரண்டு ஜோடிகளும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

படத்தின் மெயின் அட்ராக்‌ஷனாக வரும் நாசரின் நடிப்பு அருமை. வாஞ்சிநாதனாக வரும் அஜய் ரத்னம், ஜெயிலராக வரும் தீரஜ் ரத்னம்  இருவரும் யதார்த்தமாக நடித்து கேரக்டருக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவும், ஜெர்மன் விஜய், ஹரீஸ், சதீஷ் ஆகியோரின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம். மலை வாழ் மக்களின் வாழ்க்கையை மண்வாசனையோடு சொல்ல முன்வந்திருக்கும் இயக்குநர் பிரதாப் முரளியின் முயற்சிக்கு ஒரு பூங்கொத்து.