ஏகத்துக்கும் எகிறிப்போச்சு!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

அட்டைப்பட அம்மணியின் அதிரடி குதிரை யேற்றத்தை கண்டு மூர்ச்சையாகி விட்டோம்.
- சுவாமி சுப்பிரமணியா, பெங்களூரு.

‘கதையல்ல சதை’ என்கிற தலைப்பு ‘ஜூலி-2’ படவிமர்சனத்துக்கு மிகவும் பொருத்தமாக அமைந்தது.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

எங்களை மோக மேகம் சூழும் வண்ணம் அழகுத் தாரகைகளின் அட்டகாசமான படங்களை தகுந்த கமெண்டுகளோடு வெளியிடும் ‘வண்ணத்திரை’ வாழ்க வாழ்கவே!
- பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.

தஞ்சை மண்ணை கதைக்களமாகக் கொண்டு அமைந்த ‘வீரையன்’ படத்துக்கு ‘வண்ணத்திரை’ வெளியிட்ட விமர்சனம் சிறப்பு.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

நடுப்பக்க மதனலோக மந்திரியை எங்க மாயவரத்துலே எந்திரிக்க சொன்ன உமக்கு எகத்தாளம் ஏகத்துக்கு எகிறிப்போச்சு.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

மீரான் எழுதும் ‘பிலிமாயணம்’ தொடரில் ‘சிவந்தது படச்சுருள்’ என்கிற தலைப்பில் ‘சிவப்பு மல்லி’ கால கட்டத்தை கண்முன்னே கொண்டுவந்துவிட்டார்.
- கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

தன் மகனை அறிமுகப்படுத்திவிட்டு, அவனது வெற்றிக்காக ஒரு தந்தை படுகிற பரிதவிப்பை நடிகர் சரண்ராஜ், பேட்டியில் மிக யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.