பாலைவனத்தில் பாலாறு!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

‘பிலிமாயணம்’ தொடரில் இந்த வாரம் கமலா காமேஷ் குறித்த பைம்பொழில் மீரானின்  எழுத்து நெகிழவைத்தது. கமலா காமேஷின் முகத்தில் எப்போதுமே தென்படும்  மென்சோகத்துக்கு விடையும் கிடைத்தது.
- கே.கே.பாலசுப்ரமணியன், குனியமுத்தூர்.

கடந்த ஆண்டின் டாப்-5 ஹீரோ, ஹீரோயின், படங்கள், இயக்குநர்கள் பற்றிய தொகுப்போடு வெளிவந்த ‘வண்ணத்திரை’, சினிமாப் பத்திரிகைகளில் டாப்-1 ஆக ஜொலிக்கிறது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘துள்ளுவது நெஞ்சு மட்டும்தானா?’ என்கிற சரோஜாதேவியின் ‘ஏ’த்தனமான ஆதங்கத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. ‘சரோஜாதேவி பதில்கள்’ பகுதிக்கு போடப்படும் படங்கள் செம மெர்சல்.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

நடுப்பக்க பூஜாஸ்ரீ பூவாகி, காயாகி, கனிந்திருக்கிறார் என்பது பார்க்கும்போதே பளிச்சிடுகிறது.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

‘டைட்டில்ஸ் டாக்’ பகுதியில் வெளிவந்த ரமேஷ்கண்ணாவின் ‘பிரண்ட்ஸ்’ கட்டுரை நெகிழவைத்தது.
- கவிஞர் கா.திருமாவளவன்,
திருவெண்ணெய்நல்லூர்.

நல்லவேளை. தமிழுக்கு வந்ததுமே இழுத்துப் போர்த்தித்தான் நடிப்பேன் என்று கண்டிஷன் போடுவாரோ என்று பயந்து கொண்டிருந்தேன். தமிழுக்கும் தாராளம் என்கிற சன்னியின் அறிவிப்பு பாலைவனத்தில் பாலாறு பாய்ந்தது போன்றிருக்கிறது.
- சுவாமி சுப்ரமணியா, பெங்களூரு.

முப்பத்தொன்றாம் பக்க பாப்பா முன்னூறு வாட்டியாவது மூலையிலே உட்கார்ந்திருக்கும். இப்போதான் மூலையிலே உட்காருதுன்னு வாய்கூசாம பொய் சொல்லலாமா?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.