விசிறிதல-தளபதி கொண்டாட்டம்!

தீவிரமான தல ரசிகர் ராஜ் சூர்யா.  தளபதி ரசிகர் ராம் சரவணன். இருவருக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சண்டை நடக்கிறது. நாயகி ரமோனா, ராஜ்சூர்யாவை தான் ஒரு விஜய் ரசிகை என்று பொய் சொல்லி காதலிக்கிறார். உண்மை தெரிய வந்ததும் ரமோனாவை வெறுக்கிறார் ராஜ்சூர்யா. இருவரும் இணைந்தார்களா? தல - தளபதி மோதல் முடிவுக்கு வந்ததா என்பதே மீதிக் கதை.

ராஜ் சூர்யா, ராம் சரவணன் என இருவரும் தல - தளபதி ரசிகர்களாகவே வாழ்ந்திருக்கின்றனர். நாயகி ரமோனாவுக்கு அழுத்தமான கதாபாத்திரம்.  தன்ராஜ் மாணிக்கம், நவீன் ஷங்கர், சேகர் சபரிநாத் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். விஜய் கிரணின் ஒளிப்பதிவு கவனிக்கத்தக்கது.தல - தளபதி ரசிகர்களும் விரும்பும் வகையில் திரைக்கதை அமைத்து பொழுதுபோக்கு படத்தை இயக்கியிருக்கிறார் வெற்றி மகாலிங்கம்.