‘பிரா’மாதம்!ரீடர்ஸ் கிளாப்ஸ்!

‘டைட்டில்ஸ் டாக்’ பகுதியில் இடம்பெற்ற இயக்குநர் தினேஷ்குமார் ‘1977’ எங்களை நாற்பதாண்டுகளுக்கு முன்பு கால யந்திரத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டது.
- கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

பெண்கள் மணிபர்ஸை ஏன் அங்கே வைக்கிறார்கள் என்கிற நெடுநாள் சந்தேகத்தை சரோஜா மிக அழகாகத் தீர்த்து வைத்துவிட்டார்.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

அட்டைப்பட ஸ்ருதி, சுருதி கூட்டப்பட்டு சுள்ளென்று இருக்கிறாரே? அப்பா அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாலா?
- கே.கே.பாலசுப்பிரமணியன், கோயமுத்தூர்.

நடுப்பக்க ‘பிரா’மாதம் ரொம்பவே பிரமாதம்!
- பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.

தான் உலக நாயகனின் மகள்தான் என்பதை தன்னுடைய துணிச்சலான பேட்டி மூலம் வெளிப்படுத்தி விட்டார் ஸ்ருதி.
- உமரி பொ.கணேசன், மும்பை-37.

‘கேணி’ மூலமாகத் தான் நடிப்புலக தோனி என்பதை ஜெயப்ரதா நிரூபிக்க வாழ்த்துகள். அவரது சலங்கை ஒலியைக் கேட்க நீண்டகால ரசிகர்கள் தவம் கிடக்கிறோம்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

நாலாம் பக்கத்து வாத்தைப் பார்த்துக்கிட்டே இருந்தோம்.
- ராமராஜன், மேலூர்.