தாராவி



கடத்தலுக்கு மத்தியில் காதல்!

மும்பையிலிருக்கும் ‘தாராவி’யில் தமிழர்கள் பெரும்பான்மையினராக வசிக்கிறார்கள். அந்தப் பகுதியை களமாகக் கொண்டு வந்திருக்கும் படம் இது. நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் லாரிகள் திடீரென காணாமல் போகின்றன. யார் கடத்துகிறார்கள் என்கிற சஸ்பென்ஸுக்கு இடையில் காதலும் உண்டு.

 ஹீரோ கதிர், ஆரம்பத்தில் சொதப்பினாலும் இரண்டாம் பாதியில் தேறுகிறார். ‘அறம்’ அளவுக்கு தரம் இல்லையென்றாலும் கேரக்டருக்கு சிறப்பு செய்கிறார் ஹீரோயின் சுனுலட்சுமி. பாண்டாவாக வரும் சதீஷ்பாலா சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். வில்லனாக வரும் பிரபு சதீஷ், போலீஸ் அதிகாரியாக வரும் மாறன் நாயகம், அப்பாவி வில்லனாக வரும் மார்ட்டின் என அனைவரும் கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மணிகண்டன், தாராவியின் மூளை முடுக்கு என்று எதையும் மிச்சம் வைக்காமல் கேமரா வித்தை காண்பித்திருக்கிறார். அபய் பவித்ரன் இசையில் பாடல்கள் ஓக்கே. ‘வசந்த காலப் பறவை’, ‘சூரியன்’ போன்ற ஹிட் படங்கள் கொடுத்த இயக்குநர் பவித்ரன் படம் மாதிரி இல்லைன்னாலும் தியேட்டருக்கு வரும் ரசிகர்களை ‘பரவாயில்லை’ என்று பேச வைக்கிற படம்.