நிறைநாழி உருளாது!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

‘வண்ணத்திரை’யின் பக்கங்களை பெண்கள் ஆக்கிரமிக்கும் போதெல்லாம் அழகு. ஆண்கள் அச்சிடப்பட்ட பக்கங்கள் வாசகருக்கு இழுக்கு. அட்டை டூ அட்டை நாங்கள் எதிர்பார்ப்பது அழகையே. அவ்வகையில் இவ்வார ‘வண்ணத்திரை’யில் 7 பக்கங்கள், வேம்பாய் கசந்தன.
- நா.லெனின் தமிழ் முருகன், கருங்கல்பாளையம்.

நடுப்பக்க நிறைநாழி ‘உருளாது’ என்று நீங்கள் கொடுத்திருக்கும் வாக்குறுதியை சில நாழிகைகள் ரசித்தேன்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

கண்ணுக்குக் குளிர்ச்சி, கருத்துக்கு கவர்ச்சியென்று ‘வண்ணத்திரை’யை விமர்சிக்கலாம். மாதம் ஒரு முறையாவது ஏ4 அளவில் (கூடுதல் விலையோடுதான்) ‘வண்ணத்திரை’ அச்சிடப்படுமேயானால், வாசகர்களின் பொது அறிவுக்கு பேருதவியாக இருக்கும்.
- ஜி.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

ஜி.வி.பிரகாஷ், இவானா பேட்டிகள் அருமை. பாலாவின் ‘நாச்சியார்’ ஏற்படுத்திய தாக்கம், இன்னும் நீண்டகாலத்துக்கு நிலைக்கும்.
- ஆர்.கார்த்திகேயன், சென்னை-102.

‘பிலிமாயணம்’ பகுதியில் வாசித்த நளினிகாந்தின் கதை, இதுவரை வெளிவராத அவரது வாழ்க்கைப் பக்கங்களை சிறப்பாக சித்தரித்தது. அவர் இளமையில் இழந்தவற்றை, இனியாவது பெறவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘தளுக்’, ‘மொளுக்’ போன்ற பாலியல் சார்பு வார்த்தைகள், ஒவ்வொரு மொழியிலும் எவ்வாறு உருவாகிறது என்று சரோஜாதேவி ஒரே வரியில் மிகப்பெரிய மொழி ஆராய்ச்சியையே நிகழ்த்திக் காட்டிவிட்டார்.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

எறும்பூர கல்லு தேயுமோ என்னவோ? உமக்கு ஜொள்ளு வழியறது மட்டும் நல்லா தெரியுது. நீங்க திருந்துறீங்களோ என்னவோ, எங்களை திருந்த விடமாட்டீங்க.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.