மவுசு குறையலே!ஒரு நடிகைக்கு ஆசிட் டெஸ்ட் என்றால் அவர் திருமணமாகி நடிக்கும் முதல் படத்தின் வெற்றி தோல்விதான். அவ்வகையில் நாகார்ஜுனனின் மகன் நாக சைதான்யாவோடு திருமணமாகியபிறகு சமந்தா ஹீரோயினாக நடித்த தெலுங்குப்படம் ‘ரங்கஸ்தலம்’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் பாஸ் ஆகிவிட்டார்.

தென்னிந்தியாவின் கிளாமர் குயீனான சமந்தா, இந்தப் படத்தில் 80களின் குக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்துப் பெண்ணாக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்துக்கேற்ப உடையலங்காரம், அசலான நடிப்பு என்று ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் சமந்தாவுக்கு லைக்ஸ் குவிகின்றன.

- நெல்லையூரான்