X வீடியோஸ்



அந்தரங்க ஆபத்து!

பத்திரிகையாளர் அஜய்ராஜ், இணையதள ஆபாச வீடியோக்கள் பற்றி கட்டுரை எழுத முயற்சிக்கிறார். இதற்காக ஆபாச இணைய தளங்களைப் பார்வையிடும்போது, சமீபத்தில் திருமணமான தன் நண்பனின் மனைவி தோன்றும் வீடியோவைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார்.

 நண்பனிடம் அதிர்ச்சியோடு விசாரிக்கும்போது மனைவியின் அனுமதியோடு தான் எடுத்த வீடியோதான், எப்படி வெளியானது தெரியவில்லை என்று புலம்புகிறார். அந்த நண்பர் தற்கொலை செய்துகொள்ள, காவல்துறை நண்பர் ஒருவரின் அனுமதியோடு இந்த ஆபாசக் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க கிளம்புகிறார் அஜய்ராஜ்.

மெயில் ஐடி கிடைத்தால் மட்டும் போதும், சம்பந்தப்பட்டவரின் கணினியில் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் எவரோ திருடமுடியும் என்கிற சைபர் விபரீதத்தை ‘எக்ஸ் வீடியோஸ்’ எச்சரிக்கிறது.

அஜய் ராஜ், அக்ரிதி சிங், சியா மிகாஅபினவ், அபிஷேக், அஜய் தத்தா, அபர்ணா நிஷாத், அர்ஜுன், நீலம் காந்தாரி, விஷ்வந்த் என படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும், ‘இது ஒரு விழிப்புணர்வுப் படம்’ என்பதை உணர்ந்து துணிச்சலுடன் நடித்துள்ளனர்.

ஜோகானின் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. வின்சென்ட் அமல்ராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.  சமூகத்திற்கு தேவையான ஒரு கருத்தை படத்தில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சஜோ சுந்தர்.