காற்றுள்ள பந்து!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு ‘வண்ணத்திரை’ எழுதிய  விமர்சனத்தை பாலியல் ஆய்வுக் கட்டுரை என்று வாசகர் த.சத்தியநாராயணன்  பாராட்டியது மிகவும் பொருத்தமானது. அவருக்கு எனது பாராட்டுகள்.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

பெங்களூர் பொண்ணாக இருந்தாலும் காவிரி நதி நீர் பிரச்னை பற்றி நியாயமாக மக்கள் பக்கம் நின்று கருத்து சொன்ன ஷில்பா மஞ்சுநாத் பாராட்டுக்குரியவர்.- கே.நடராஜன், திருவண்ணாமலை.

டெட்பூல் - 2 ஆங்கிலப்பட விமர்சனம் வொண்டர்ஃபுல். படத்தைப் பார்க்கத் தூண்டும் இதுபோன்ற விமர்சனங்களைத்தான் ரசிகர்கள் பத்திரிகைகளில் எதிர்பார்க்கிறார்கள்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

சரோஜாதேவி, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் பார்த்திருப்பதாக அவரது பதில்களில் இருந்து தெரிகிறது. சின்னப் பொண்ணுங்க இதுமாதிரி படமெல்லாம் பார்ப்பது தப்பில்லையா?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

நடுப்பக்க காற்றுள்ள பந்தைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம் மாதிரி இருக்கு தலைவரே.
- ராஜாராமன், பார்வதிபுரம்.

சினிமாவில் எப்படி கட்டிப்புடிச்சி நடிப்பாங்க என்கிற சந்தேகம், இன்றும் கிராமப்புறத்தில் வசிப்பவர்களுக்கு உண்டு. ‘பிலிமாயணம்’ தொடரில் அதற்குரிய விடையை ஐயமற கொடுத்துவிட்டார் பைம்பொழில் மீரான்.
- குந்தவை, தஞ்சாவூர்.

தன்னுடைய மகன்களே இயக்குநராகி விட்ட நிலையிலும், ‘இளம் இயக்குநர்களுக்கு பொறுப்பில்லை’ என்று சூடு போட்டிருக்கும் கஸ்தூரிராஜாவுக்கு திரையுலகின் மீது இருக்கும் அளப்பரிய அக்கறை புரிகிறது.
- கே.கே.ரமேஷ், பெங்களூரு.