படத்தோட பேருதான் போத.. ஆனா ‘யூ’



புதுமுகம் விக்கி நடிக்கும் ‘போத’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சோஷியல் மீடியாவில் வைரலானதைத் தொடர்ந்து அதன் இயக்குநர் சுரேஷ்.ஜி-யிடம் பேசினோம்.‘‘இது ப்ளாக் ஹ்யூமர் ஜானர் படம். சினிமாவில் வாய்ப்பு  தேடி சென்னைக்கு வரும் இளைஞன். சர்வைவல் பிரச்சனைக்காக அவன் தேர்ந்தெடுத்த பாதை அவனை சிக்கலில் சிக்க வைக்கிறது. அவன் எப்படி வெளியே வருகிறான் என்பதை நகைச்சுவையாகச் சொல்லியுள்ளேன்.

இந்த உலகத்தில் பணம் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. அதே சமயம் பணத்தால் எல்லாத்தையும் சாதித்துவிட முடியாது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் சொல்லியுள்ளேன். நாயகனாக நடிக்கும் விக்கி ஆக்டிங் ஸ்கூல் டீச்சர் என்பதால் அவரிடம் எளிதாக வேலை வாங்க முடிந்தது. படத்தில் பணம் முக்கிய கேரக்டராக வருகிறது. ஒரு பாடலில் ரிஷாவை பணமாக உருவகப்படுத்தி ஒரு பாடல் எடுத்துள்ளோம்.

‘ஜூங்கா’ படத்துக்கு இசையமைத்துள்ள சித்தார்த் விபின் சின்ன படம் என்று நினைக்காமல்  பிரமாதமான பாடல்கள் கொடுத்துள்ளார். படத்தோட ஸ்டில்ஸை பார்த்துவிட்டு ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ மாதிரி இதுவும் ஆபாசப் படமா என்று கேட்கிறார்கள். இது ஃபேமிலி ஆடியன்ஸுக்கான படம். சென்சாரும் ‘க்ளீன் யூ’ கொடுத்திருப்பதால் தைரியமாக ஃபேமிலியோடு தியேட்டருக்கு வரலாம்’’ என்கிறார் சுரேஷ்.ஜி.

- எஸ்