இந்தியில் தமன்னா!



பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியில்தான் அறிமுகமானார் தமன்னா. இருப்பினும் தமிழ், தெலுங்கு மொழிகளில்தான் தொடர்ந்து  வாய்ப்புகள் கிடைத்து முன்னணி நடிகை ஆனார். பாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டியே தீரவேண்டும் என்கிற வெறி அவருக்கு  இருக்கிறது. இடையிடையே முயற்சித்தும் பெரிய பிரேக் அங்கு அவருக்கு கிடைக்கவில்லை.

கமலின் ‘உன்னைப் போல் ஒருவன்’, அஜித்தின் ‘பில்லா-2’ படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி, இப்போது நயன்தாராவை வைத்து  ‘கொலையுதிர் காலம்’ இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் இந்தி ரீமேக்காக ‘காமோஷி’யையும் கூடவே உருவாக்குகிறார். தமிழில்  நயன்தாரா நடிக்கும் வேடத்தில் இந்தியில் தமன்னா நடிக்கிறார். இந்தப் படம் தன்னை இந்தியில் நிலைநிறுத்தும் என்று உற்சாகமாக  பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

- இக்னேஷியஸ்