கேமரா ஃபீவர்!



சரோஜாதேவி பதில்கள்

* புகுந்து விளையாடுவது உங்களுக்குப் பிடிக்குமா?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
எதற்குள் என்பதைப் பொறுத்தது.

* மது, மாது, சூது...
- பி.ராஜேந்திரன், திருவண்ணாமலை.
மதுவும், சூதும் சிற்றின்பம்; மாது மட்டுமே பேரின்பம்.

* முதலிரவை முதல் பகலாக்கினால் என்ன?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
ஆக்கலாம். ஆனா, புதுமுகத்துக்கு கேமரா ஃபீவர் ஜாஸ்தியா இருக்கும். ஷாட் சரியா கம்போஸ் பண்ண முடியாது. புரியுதா?

*பச்சை குத்துவதற்கு ஏத்த இடம் எது?
- கே.கே.பாலசுப்பிரமணியன், குனியமுத்தூர்.
எங்கே வசதியோ அங்கே குத்திக் கொள்ளலாம். இதெல்லாம் பத்திரிகைக்கு எழுதிக் கேட்கவேண்டிய கேள்வியா சார்?

* இதயத்தில் வாடகைக்குக் குடியிருக்கலாமா?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
இப்போல்லாம் ரென்ட் ஜாஸ்தி. பேங்க் லோன் போட்டாவது சொந்தமாக வாங்கிக்கிறது பெட்டர்.