தப்பு பண்ணலாம் தப்பில்லை!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

‘டைட்டில்ஸ் டாக்’ பகுதியில் வெளிவந்த பாடகர் வேல்முருகன் அவர்களின் ‘அண்ணனுக்கு ஜே’ கட்டுரை அருமை. தெரிந்த பிரபலங்களின் தெரியாத வாழ்க்கையை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் இப்பகுதி ‘வண்ணத்திரை’ இதழின் மணிமகுடம் என்றால் மிகையாகாது.
- ஜி.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

‘மின்னுவதெல்லாம் பொன்தான்!’ என்கிற தொடரின் தலைப்பே தங்கம் போல மின்னுகிறது. எங்களது வணக்கத்துக்குரிய எழுத்தாளர் பைம்பொழில் மீரான் அவர்களின் புதிய பயணம் ஆரம்பமே அமர்க்களம்.
- முரளி, சென்னை.

ஆண்கள் மட்டுமே நடிக்கும் படம் என்பது புதுமுயற்சிதான். அதை ஆண்கள் மட்டுமாவது காணவேண்டுமே என்பதுதான் நம்
எதிர்பார்ப்பு.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

மணிரத்னம் இன்னமும் போட்டியிட்டுக் கொண்டிருப்பது அவரது பழைய கிளாசிக் படங்களோடுதான் என்கிற வரிகள் மணியான உண்மை. ரத்னச்சுருக்கமான துல்லியம்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘தப்பு பண்ணலாம் தப்பில்லை’ என்கிற நடுப்பக்க கமெண்டு டாபிக்கலாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வெளிப்படுத்துகிறது. ‘வண்ணத்திரை’யில் கமெண்டு அடிக்கவே தீர்ப்புகள் வருகின்றனவோ என்றொரு சந்தேகம்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘குடும்ப குத்துவிளக்கு’ என்று டைட்டில் போட்டுவிட்டு, அதற்கு ‘கும்’மென்று ஜிதாவின் ஸ்டில்லைப் போட்ட லே-அவுட் கலைஞரின் படைப்பாற்றலை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.
- ரஞ்சித், தாராபுரம்.

முதல் படம் வெளிவருவதற்கு முன்பே மூன்று படங்களில் ஹீரோவாகியிருக்கும் வி.ஆர்.விநாயக் அடுத்த சூப்பர் ஸ்டாரா அல்லது அடுத்த பவர் ஸ்டாரா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.
- குந்தவை, தஞ்சாவூர்.