நான் யார்? ரஜினி கேட்கிறார்!



‘அண்ணாமலை’ படத்தில் ‘ஒரு பெண்புறா’ பாட்டில் ‘கட்டாந் தரையில் ஒரு துண்டை விரித்தேன், கண்ணில் தூக்கம் சொக்குமே அது அந்தக் காலமே.. மெத்தை விரித்தும், சுத்தப் பன்னீர் தெளித்தும் கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்தக் காலமே’ என்று பாடுவார். பாடலை எழுதியது வேண்டுமானால் வைரமுத்துவாக இருக்கலாம். கருத்து ரஜினியுடையது. அவரே சொல்கிறார் கேளுங்கள்.

“நான் கண்டக்டராக இருந்தபோதும், கூலிக்காரனாக இருந்தபோதும் சந்தோஷமாக இருந்தேன். நிம்மதியாக இருந்தேன். இப்போது அந்த நிம்மதி, சுகம் இல்லை.காரணம் யார்?

சத்தியமாக நான் இல்லை. எனக்குத் தெரியும்.இதெல்லாம் நானாகக் கேட்டதில்லை. தானாக வந்தது.ஏதோ ஒரு சக்தி என்னை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. நான் ஆடுகிறேன்.

அந்த சக்தி எது? ஆடிக்கொண்டிருக்கும் நான் யார்?
நான் யார்? நான் யார்?
எல்லோரையும் கேட்கிறேன். நான் யார்?”