மூடவேண்டியது கண்ணை அல்ல!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

‘சந்தோஷத்தில் கலவரம்’ ஹீரோ நிரந்தை ‘வண்ணத்திரை’ தனது பாணியில் அறிமுகப்படுத்தி இருந்த விதம் சிறப்பு.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

நடுப்பக்க சன்னிலியோன் படத்துக்கு நீங்க அடிச்ச மாங்கா கமெண்டு மழைக்கு நல்லா பாங்கா இருக்குது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

கல்யாணத்துக்கு அப்புறம் நமீதா நடிக்கிறார் என்கிற தகவல் கண்டு வாலிப வயோதிக அன்பர்கள் உச்சிகுளிர்ந் தோம். காட்டு காட்டுவென (நடிப்பில்தான்) மீண்டும் ஒரு காட்டு காட்டுவார் என எதிர்பார்ப்போம்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

முன்னட்டை, பின்னட்டையில் சாக்‌ஷி அகர்வால் தந்த தரிசனத்தைக் கண்டதுமே அட்டை வாசகம்தான் அழுத்தமாக நினைவுக்கு வந்தது, ‘மூடவேண்டியது கண்ணை அல்ல’.
- எம்.சேவுகப் பெருமாள், பெருமகளூர்.

‘எதுவா ஆக நினைக்கிறீங்களோ, அதுக்கு தயாராக இருங்க’ என்கிற காளிவெங்கட்டின் ‘டைட்டில்ஸ் டாக்’ அனுபவ அட்வைஸ், சினிமாவில் சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு அவசியமான டானிக்.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

சினிமா சிலரை சிவப்புக் கம்பளம் விரித்து வாய்ப்பு மலர்களை தூவி சிகரம் நோக்கி கைபிடித்து அழைத்துச் செல்கிறது; பலரை படுபாதாளத்தில் தள்ளி வாழ்வை முடித்துவிடுகிறது என்பதற்கு ‘மின்னுவதெல்லாம் பொன்தான்’ பகுதியில் இடம்பெற்ற குட்டியின் கட்டுரையே கண்ணீர் சான்று.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

‘வண்ணத்திரை’யில் வெளியிடப்படும் சினிமா விமர்சனங்கள் சரியான கணிப்பாக, திரைத்துறையினருக்கு நிறைகுறைகளை சுட்டிக் காட்டுவதாக சிறப்பாக இருக்கின்றன.
- எம்.கதிர்வேல், கோவை-14.