அந்த நாள் ஞாபகம்!ரீடர்ஸ் கிளாப்ஸ்!

‘ஹேப்பி நியூ ஃபிகர்’ என்கிற வாசகத்தோடு அட்டைப்படமே பிரும்மாண்டமாக 2019ஐ வரவேற்றிருக்கிறது. ‘வண்ணத்திரை’ வாசகர்களுக்கு இந்த ஆண்டும் ஹேப்பியாகவே அமையும்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

நடுப்பக்க ரம்யாவின் பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டியதற்கு நன்றி பாஸ்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

‘சீதக்காதி’ படத்தின் விமர் சனத்துக்கு நீங்க வைத்த தலைப்பு ரொம்பப் பொருத்தம். தமிழில் வெளிவரும் எல்லாப் படத்துக்கும் விமர்சனம் எழுதிப் பாராட்டும் ஒரே வார இதழ் ‘வண்ணத்திரை’ மட்டுமே.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘பேட்ட’ ரகசியத்தை அப்பா கஜராஜுக்கே சொல்லாமல் அடைகாக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இமாலய வெற்றியைப் பெறப்போவது உறுதி.
- ரஜினி மாணிக்கம், வண்ணாரப்பேட்டை.

என்னைப் போன்ற லதா ரசிகர்களுக்கு நீண்டநாள் கழித்து திருவிழா கோலாகலமாக அமைந்தது அவரது லேட்டஸ்ட் பேட்டி. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே...
- ரமா மணாளன், சிவகங்கை.

நடிகரும், பாடலாசிரியருமான செந்தில்குமரன், தன்னுடைய சினிமா அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட ‘டைட்டில்ஸ் டாக்’ பகுதி அருமை. திறமையாளர்களுக்கு அங்கீகாரம் லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக வரும்.
- சிவகுமார், கோவை.

‘மறுமலர்ச்சி’ பாரதிக்கு மீண்டும் மலர்ச்சி ஏற்படவேண்டுமென வெங்கடேசப் பெருமாளை வேண்டிக் கொள்கிறேன்.
- நாகரத்தினம், திருப்பதி.