இன்னா செய்தாருக்கு நன்னயம் செய்தல்!



‘அக்னி’ படத்துக்குப் பிறகு ராகவா ஹரிகேசவா ஒளிப்பதிவு செய்து இயக்கி நடிக்கும் படம் ‘தீமைக்கு நன்மை செய்’. கதாநாயகிகளாக ஸ்ரீகா, சிந்துஜா நடித்துள்ளனர். இவர்களுடன் பொன்.இறையன்பு, ‘கருப்பன்’ ரமணா, ‘நாடோடிகள்’ கோபால் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
பாடல்கள் டாக்டர் வடுகம் இரா.சிவக்குமார். இசை செளமியன். எம்.எஸ்.பனானா பிலிம்ஸ், குட் டைம் பிலிம் என்டர்டெயின்மென்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை கம்பம் மு.சேத்தூர், நசியனூர் பழனிச்சாமி இருவரும் தயாரிக்கிறார்கள்.

கம்பம், கோவளம், கொடைக்கானல், கோவை, ஈரோடு மற்றும் கேரளாவில் இரண்டு கட்டமாக படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணியில் பிஸியாக இருந்த இயக்குநர் ராகவா ஹரிகேசவாவிடம் பேசினோம்.

‘‘ஒருவன் தீமை செய்தால் அவனை தண்டிக்காமல் அவன் நாணி வெட்கித் தலை குனியும் அளவிற்கு நல்ல காரியம் செய்ய வேண்டும் என்பதே இந்தப் படத்தின் மையக்கரு. எந்த ஒரு பிரச்சனைக்கும் பழிக்குப் பழி வாங்குவது தீர்வாகாது’’ என்பதை கமர்ஷியல் கலந்த சமூகப் பார்வையுடன் சொல்லியிருக்கிறேன்’’ என்றார்.

- எஸ்