SPOT



கிளாமர் தெறிக்குது!

நான்கு  இளைஞர்கள். அவர்களில் ஒருவருக்கு பிறந்தநாள். ஹேப்பியாக கொண்டாட ஒரு ஸ்பாட்டுக்கு போகிறார்கள். அங்கே கொலைவெறிக் கும்பலால் துரத்தப்படும் ஒரு அழகிக்கு லிஃப்ட் கொடுக்கிறார்கள். அந்த அழகியை துரத்தி வந்தவர்கள், இப்போது இவர்களையும் சேர்த்து துரத்துகிறார்கள். அழகியை ஏன் துரத்தினார்கள், இவர்கள் தப்பித்தார்களா என்கிற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்லுகிறது படம்.

நான்கு இளைஞர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘கராத்தே’ கெளஷிக்தான் நாயகன். இளமைத் துள்ளலுடன் நடித்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கிறார். நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்தால் தொடர்ந்து கோலிவுட்டில் வலம் வரலாம். நாயகி அக்னி பவர் தான் வரும் காட்சிகளில் கிளுகிளுப்புக் காட்டி ரசிகர்களைக் கிளர்ச்சி அடையச் செய்கிறார். பாடல் காட்சியெல்லாம் வேற லெவல் கிளாமர்.

நாசருக்கு பதறாமல் பதற்றத்தை பற்றவைக்கும் கேரக்டர். சிறப்பு. கொலைகார கும்பல் தலைவராக வரும் டைகர் கோபால் வில்லத்தனத்தில் குறையேதுமில்லை.விஜய்சங்கர் இசையில் ‘தாஜ் மகால்’ பாடல் இனிமை. மோகன் ராஜின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம். இயக்குநர் வி.ஆர்.ஆர். தரமான மசாலா படத்தை கொடுத்ததற்காக காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம்.  லாஜிக் பார்க்காமல் படம் பார்க்க வருபவர்களுக்கு இந்த ஸ்பாட்... ஜாக்பாட்!