க்ளீன் பவுல்டு!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

சிந்துபாத் - சிறப்பு, தர்ம  பிரபு - பகுத்தறிவு, ஜீவி - மேதாவி, ஹவுஸ் ஓனர் - கவுரவம் என்று நான்கு படங்களுக்கும் சிறப்பான விமர்சனத்தோடு, தெளிவான விலாசம் தந்து ரசிகர்களை திரையரங்கு நோக்கிச் செல்லவைத்த ‘வண்ணத்திரை’யின் சேவை திரையுலகத்துக்கு தேவை.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

‘கூடு விட்டு கூடு பாய்ந்தேன்’ என்று சொல்லும் நந்திதாவின் அனுபவங்கள் அத்தனையும் கொய்ட் இண்டரெஸ்டிங் சார்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்துகொண்டிருந்த நேரத்தில் பந்து, பேட், விக்கட், சிக்ஸர், அம்பயர் என்று புளோ-அப் கமெண்டுகளில் நீங்கள் பாட்டுக்கு விளாசித் தள்ளி விட்டீர்கள்.
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.

கிரிக்கெட்டில் விக்கெட் விழுந்திச்சோ இல்லையோ, எங்கள் நெஞ்சம் ஆஷிமாவின் அட்டைப்படம் கண்டு க்ளீன் பவுல்டு.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘வண்ணத்திரை’ புளோ-அப் கமெண்டுகளுக்கு சென்ஸாரே இல்லையா? எங்களை மாதிரி வயசுப் பசங்க கெட்டுப் போறாங்க சார்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

70வது படம் இயக்குகிறார் புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் என்கிற தகவல், ஆரம்பத்திலிருந்து அவருடைய படங்களை ரசித்து வரும் எங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தகவல்.
- ஜி.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

‘இசை’யைவிட தசையைக் காட்டுவதற்கு முயற்சித்ததாலேயே ‘இசை’ பட நாயகி சாவித்ரி, முதல் படத்தோடு மூட்டை கட்டிவிட்டார் என்று கருதுகிறேன். ‘மின்னுவதெல்லாம் பொன்தான்’ பகுதி பிரமாதமாக இருக்கிறது.
- கே.நடராஜன், திருவண்ணாமலை.