அந்த நாலு பேர்!



மான்குட்டி - விமர்சனம்

தன்னுடைய ஒரே மகள் ஹேமலதாவை தன் தங்கை மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க நினைக்கிறார் அப்பா அருள்மணி. ஆனால் அவருடைய மனைவியோ தன்னுடைய அண்ணன் மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க நினைக்கிறார். இதற்கிடையே அருள்மணிக்கு கடன் கொடுத்த கந்துவட்டிக்காரர் மனநலம் குன்றிய தன் மகனுக்கு பெண் கேட்கிறார். இந்நிலையில் நர்சிங் முடித்துவிட்டு ஒரு மருத்துவமனையில் வேலைக்கு சேருகிறார் ஹேமலதா. அங்கு டாக்டராக பணிபுரியும் நாயகன் சுரேஷ், நாயகியை காதலிக்கிறார். இந்த நான்கு முனை போட்டியில் யார் ஹேமலதாவின் கழுத்தில் தாலி கட்டுகிறார்கள் என்பதை திடுக் திருப்பங்களுடன் சொல்வதுதான் இந்த ‘மான்குட்டி’.

நாயகன் சுரேஷ் அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார். நாயகி ஹேமலதா அழகாக வந்து செல்கிறார். அருள்மணி, நெல்லை சிவா, மீட்டர் வட்டி முருகேசன் கேரக்டரில் வரும் இயக்குநர் பூபாலன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கச்சிதம்.சிவசுப்ரமணியம்- நந்தாஜி யின் பின்னணி இசையும், மகிபாலன் ஒளிப்பதிவும் படத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன. சகுனம், சம்பிரதாயம், பில்லி, சூனியம், தோஷம் என்பது மூடநம்பிக்கை. ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள மனப்பொருத்தமே போதுமானது என்றும், சீர்திருத்தத் திருமணமே சிறந்த திருமணம் என்றும் கருத்து சொல்லி கவனம் ஈர்த்துள்ளார் இயக்குநர் எம்.பூபாலன்.