I hate nights! டாப்ஸி ஓப்பன் டாக்




‘‘ஸ்டார்ட்டிங்ல நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சிட்டு சாஃப்ட்வேர்ல ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். அதன்பிறகு மாடலிங்ல கவனம் போச்சு. அந்த டைம்லதான் ‘ஆடுகளம்’ ஆஃபரும், தெலுங்கில் ‘ஜூம்மன்டி நாதம்’ வாய்ப்பும் வந்துச்சு. ஒரே நேரத்துல தமிழிலும் தெலுங்கிலுமா நடிச்சிட்டிருந்தேன். அப்பெல்லாம் எனக்கு இந்தி, இங்கிலீஷ் தவிர வேறெந்த லாங்குவேஜும் தெரியாது. புரியாது. சினிமா இண்டஸ்ட்ரியும் ரொம்பவே புதுசு. ஸோ, கொடுக்கற டயலாக்ல ஒரு வாக்கியத்தைக் கூட முழுசா உள்வாங்கி உணர்ந்து நடிக்க ரொம்பவே சிரமப்பட்டேன். அது சந்தோஷமோ, துக்கமோ எப்படிப்பட்ட எமோஷனான வாக்கியம்னு தெரிஞ்சுக்காமலேயே நடிச்சிருக்கேன்.

ஆனா என்னோட அதிர்ஷ்டம், நல்ல பெயரும் வந்திருக்கு.ஒரு சென்டன்ஸோட வார்த்தைகள்ல எந்த வார்த்தைக்கு இடையே நிறுத்தி உச்சரிக்கணும்.. ரியாக் ஷன் கொடுக்கணும்ங்கற எந்த விஷயமும் அப்ப புடிபடல. சுருக்கமா சொன்னா, ஆக்ட்டிங், ஒரு எக்ஸ்பிரிமென்ட் மாதிரிதான் இருந்துச்சு. டோலிவுட்ல கொஞ்சம் பிசியான டைம்ல இந்தியில் ‘பிங்க்’ வாய்ப்பு வந்துச்சு. நான் பாலிவுட் போகணும்னு ப்ளான் பண்ணி எல்லாம் மூவ் ஆகல. அங்கே வாய்ப்பு அமைஞ்சது. போனேன். அது ஒர்க் அவுட் ஆச்சு. இந்தியில் நடிக்கும் போது அது எனக்கு தெரிஞ்ச லாங்குவேஜ்னால எளிதா இருந்துச்சு. லாங்குவேஜ் புரிஞ்சு நடிக்கறது ரொம்ப அவசியமானதுனு உணர்ந்தேன். ‘பிங்க்’ வெற்றிக்குப் பிறகு பாலிவுட்டில் பேசப்பட்டேன். என் சினி கேரியருக்கே டர்னிங் பாயிண்ட் அதான். கதையோட அவசியம் உணர்ந்தேன். அதன்பிறகே ஸ்கிரிப்ட்டுக்கு முக்கியம் கொடுத்து படங்கள் பண்ண ஆரம்பிச்சேன்.’’ டாப்ஸி பேச ஆரம்பித்தாலே அள்ளுது எனர்ஜி.

“இந்தியில் ‘பிங்க்’ செய்த நீங்க, தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’யிலும் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்..”

“அதான் இந்தியில் பண்ணிட்டேனே! திரும்பவும் தமிழில் எதுக்கு? உண்மையை சொல்லணும்னா இங்கே யாரும் என்னை நடிக்க கேட்கல. அப்படிக் கேட்டிருந்தாலும் நடிக்க சம்மதிச்சிருக்க மாட்டேன்னுதான் நினைக்கறேன். என் சினி கேரியரை தீர்மானிச்ச படம் ‘பிங்க்’. அந்தப் படத்துல என் கேரக்டர்ல நடிக்க நானே மனதளவில் ரொம்பவே மெனக்கெடணும். ஸ்ட்ரெஸ் ஸும் ஜாஸ்தி ஆகும். ஸோ, மறுபடியும் அப்படி ஒரு எமோஷனல் ரிஸ்க் கேரக்டரை என்னால பண்றது சிரமம்தான்.

அதைவிட எனக்கு பெரிய வாய்ப்பா ‘கேம் ஓவர்’ அமைஞ்சது. ஒரு வீட்ல ஒரு பொண்ணு தனியா இருக்கா. அதுவும் அவ வீல்சேர்ல இருக்கா. முகம் தெரியாத சிலர் அந்த வீட்டுக்குள்ள நுழைய முயற்சி பண்றாங்க. அந்த ஆபத்தை அந்த பொண்னு எப்படி எதிர்கொள்றா? இதான் ‘கேம் ஓவர்’ கதை. இந்தியிலும் இப்படிப்பட்ட ஸ்கிரிப்ட்கள்தான் நான் விரும்பி பண்றதால, கண்டிப்பா இந்த கான்சப்ட்டை நான் ஓகே பண்ணுவேன் என்ற நம்பிக்கையோடு டைரக்டர் அஸ்வின் வந்து கதையை சொன்னார். ரொம்ப எமோஷன் ஆனேன். பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது இந்தியா முழுவதும் நடக்கறதுதானே! ஸோ, இதை ஒரு பான் இந்தியப் படமாகத்தான் அஸ்வின் நினைக்கறார்.

இந்தப் படத்தின் முதல் போஸ்டர்ல ‘டாப்ஸி இன் கேம் ஓவர்’னு இருந்ததை பார்த்ததும், ரொம்ப சந்தோஷமாகிடுச்சு. அதுஒரு தனி ஃபீல். ஏன்னா, இந்தியில் ஒரு படத்தோட போஸ்டர் வெளியாகும் போது, நடிகர்களின் பெயர்கள் அவ்வளவு ஈசியா இடம்பெறாது. ஸோ, போஸ்டர்ல என் பெயரை பார்த்ததும், என்னோட பொறுப்பு இன்னும் ஜாஸ்தியாகிடுச்சு. நாற்பது நாட்கள்கிட்ட நடந்த ஷூட்ல நான் எப்பவும் சீரியஸான மூட், வீல்சேர் பர்ஃபார்ம்.. கிட்டத்தட்ட ஒரு சைக்கோ உமனாட்டம்  ஸ்பாட்ல தோணியிருக்கும்.  . டூமச் ஆஃப் எமோஷன்ஸ்.  ஆனா, என் ரியல் லைஃப்லேயும் நான் கொஞ்சம் சீரியஸானவ.  அதனாலேயே  அந்த கேரக்டர்ல  ஈசியா கனெக்ட் ஆகிட்டேன்.’’

“இன்ஸ்டாகிராமில் கலக்குறீங்களே?”


“ஆக்சுவலா நான் ஜாலியான பொண்ணு இல்ல. ஆனா, ஐயெம் எ ஹேப்பி பர்சன். எனக்கும் மத்தவங்களப் போல சிரிக்கவும் தெரியும். சந்தோஷமா இருக்கவும் தெரியும். அதே மாதிரி கேரக்டர்கள் கிடைக்கும்போது அப்படி அச்சு அசலா அப்படியே ஸ்கோர் பண்ணவும் செய்வேன். வாழ்க்கையின் தருணங்களை சந்தோஷமா கொண்டாடக்கூடியவ நான். அதோட ஸ்வீட் மொமண்ட்ஸை கொஞ்சம் அள்ளி இன்ஸ்டாவில் பதியறேன்.”

“நைட்டுன்னாலே உங்களுக்கு அலர்ஜியாமே?”

“இட்ஸ் ட்ரூ. ஐ லவ் மை ஒர்க். ஆனா, ஐ ஹேட் நைட் ஷூட்ஸ். ரெகுலராகவே ராத்திரி பத்து, பத்தரைக்கெல்லாம் ‘குட்நைட்’ சொல்லிட்டு தூங்கிடுவேன். அதைப்போல காலையில ஆறு மணிக்கெல்லாம் எழுந்திரிச்சிடுவேன். இது என் ரெகுலர் ஹேபிட். தமிழ்லேனு இல்ல. பொதுவாகவே நான் நடிக்கும் படங்கள்ல நைட் ஷூட் இருக்குதுனு தெரிஞ்சாலே, கொஞ்சம் கிடுகிடுக்கும். அதுக்காக ஒரு மாசத்துக்கு முன்னாடியே ‘ஏய் டாப்ஸி.. உனக்கு அடுத்த மாசம் நைட் ஷூட் இருக்கு..  உன்னால கண்விழிச்சு ஒர்க் பண்ண முடியும். முடியும்.. முடியும்’னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே இருப்பேன். ஏன்னா, நைட் பனிரெண்டு மணிக்கு மேல நம்ம மூளை வேலை செய்யறது நின்னுடும். அப்புறம், ரோபோ மாதிரி சொன்னதை மட்டும் கேட்டு பண்ண வேண்டியிருக்கும். கிரியேட்டிவிட்டி இருக்காது. நம்ம உணவுப் பழக்கம், ரொட்டீன் ஒர்க்னு அத்தனையும்  பாதிக்கும். அதனாலதான் ஐ ஹேட் நைட் ஷூட்ஸ்.”

- மை.பாரதிராஜா