பருவக்காட்டை பார்த்ததுமே...!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

தமிழ் சினிமாவின் அரிதான முயற்சியான ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு ‘வண்ணத்திரை’ செய்த விமர்சன சிறப்பு பாராட்டத்தக்கது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

சிலுக்கின் பழைய பேட்டியை தூசு தட்டி தந்ததற்கு நன்றி. அந்தப் பக்கங்களை வாசிக்கும்போது எண்பதுகளில் வாழ்ந்த ஃபீலிங்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

அக்காவா நடிச்சா நிச்சயமா தப்புதான். பின்னே? லிஜோமோல் ஜோஸ் அவ்வளவு இளமையாக இருந்து கொண்டு, இந்த வயதிலேயே அக்கா, அண்ணின்னு நடிச்சா ஹீரோயின் பஞ்சம் வந்துடாதா?
- ரமேஷ், நாமக்கல்.

நடுப்பக்க பருவக்காட்டை பார்த்ததுமே பரிசம் போட துடித்தேன்.
- மிதுன், தேன்கனிக்கோட்டை.

மலையாள அனுபவங்கள் என்று டைட்டிலில் கோடு காட்டிவிட்டு உள்ளே நடிகர் பிரஜினின் அனுபவங்களை போட்டு கலாய்த்துவிட்டீர்களே?
- சதீஷ், பொன்னேரி.

பிரியாமணி திரும்பவும் வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டு பருத்திவீரன் ரசிகர்கள் கிளர்ச்சி அடைந்திருக்கிறோம்.
- முனீஷ்காந்த், தேனி.

ஹாலிவுட்டுக்கு போகிறாரா ஜி.வி.பிரகாஷ்? பலே.. பலே..
- குந்தவை, தஞ்சாவூர்.