லைவ் ரிலே!



சரோஜாதேவி பதில்கள்

*ஆண்கள் துணையின்றி பெண்கள் பிள்ளை பெற்றுக் கொள்ள முடியுமா?
- பி.சேக்கிழார், கோவிலம்பாக்கம்.
நவீன அறிவியல் இதை சாத்தியமாக்கி இருக்கிறது. இனியாவது வாலை சுருட்டிக் கொள்ளுங்கள்.

*நாற்பதாகியும் பிரமச்சாரியாய் அலையும் ஆண்களைப் பற்றி...
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
தன் கையே தனக்குதவி என்று வாழும் மகத்தான உழைப்பாளிகள்.

*மனைவியை விட மச்சினி அழகாய் தெரிவது ஏன்?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
இக்கரைக்கு அக்கரை பச்சை.

*முத்தம் எதுவரை தித்திக்கும்?
- கே.நடராஜன், திருவண்ணாமலை.
அது ஸ்டார்ட்டர் மட்டும்தான். பொழுதன்னைக்கும் அதை மட்டுமே செஞ்சிக்கிட்டிருந்தா திகட்டும்.

*முதலிரவை பவுர்ணமி தினத்தில் மொட்டை மாடியில் வைத்துக் கொள்ளலாமா?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
கூகிள் மேப்புலேயே லைவ் ரிலே பண்ணிடுவானுங்க. பரவாயில்லையா?