சும்மா மின்னுதே!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

சரோஜாவைக் காணோமே? கைலாஷ் நாட்டுக்கு எஸ்கேப்பா?
- ரமேஷ், நாமக்கல்.

சென்னை சர்வதேச திரைப்படவிழா குறித்த கட்டுரையில் ‘ஒரே படுக்கையில் நான்கு இளம்பெண்களுடன் முதியவர் உல்லாசமாக குழந்தை போல படுத்து உறங்குவது’ என்கிற காட்சி கொண்ட படத்தைப் பற்றி வாசிக்கும்போது, நாமும் பிரேசிலில் பிறக்காமல் போய்விட்டோமே என்கிற ஏக்கம்தான் ஏற்பட்டது.
- என்.இன்பா, திருவண்ணாமலை.

‘வண்ணத்திரை’ புளோ-அப்புகளை பார்த்துதான் சுவாமிகள் தங்களை சார்ஜ் செய்துகொள்கிறோம். கைலாஷ் நாட்டுக்கும் சில பிரதிகள் அனுப்பி வைக்கிறோம்.
- சுவாமி சுப்பிரமணியா, பெங்களூர்.

டாப் 5 ஹீரோ, ஹீரோயின், மூவிஸ், டைரக்டர் என்று ‘வண்ணத்திரை’ அடையாளம் காட்டியிருப்பது அத்தனையுமே முத்துகள்.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்

‘ஆரஞ்சுன்னாலே அலர்ஜிம்மா’ன்னு சொல்லிட்டு காவி டிரெஸ்ஸை காட்டுறீங்களே, உங்க அரசியல் புரியாதுன்னு நெனைச்சீங்களா?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

தமிழ்த் திரையுலகை மிகத் துல்லியமாக கவனித்து, திரைக்கலைஞர்களை சிறப்பாக கெளரவிக்கும் வகையில் ‘வண்ணத்திரை’யின் டாப்-5, 2019 தேர்வுகள் அனைத்துமே எங்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பாக ஜொலித்தது.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

முன்னட்டை மற்றும் பின்னட்டை மெஹ்ரீன் சும்மா மின்னுதே!
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.