வேலை ரெடி!



வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.  இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

சிவில் எஞ்சினியரிங் பட்டதாரி களுக்கு தேசிய கட்டுமான கழகத்தில் வேலை!

நிறுவனம்: நேஷனல் பில்டிங் கன்ஸ்ட்ரக்‌ஷன் கார்ப்பரேஷன் (என்.பி.சி.சி) எனப்படும் தேசிய கட்டுமான கழக நிறுவனம்
வேலை: ஜூனியர் எஞ்சினியர், சீனியர் புராஜக்ட் எக்ஸிகியூட்டிவ் உட்பட 14 பிரிவு
களில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 94. இதில் மேற்சொல்லப்பட்ட வேலைகளில் மாத்திரம் முறையே 40, 10 இடங்கள் அதிகபட்சமாக காலியாக உள்ளன
கல்வித்தகுதி: எஞ்சினியர் வேலைக்கு
3 வருட சிவில் எஞ்சினியரிங் டிப்ளமோ படிப்பும்,
எக்ஸிகியூட்டிவ் வேலைக்கு சிவில்
எஞ்சினியரிங் பட்டப்படிப்பும் அவசியம்
வயது வரம்பு: வேலைப் பிரிவுகளுக்கு ஏற்றபடி வயது வரம்பு 28 முதல் 49 வரைக்கும் வரை
யறுக்கப்பட்டுள்ளது. எஞ்சினியர் வேலைக்கு 28 வயதுக்குள்ளும் எக்ஸிகியூட்டிவ் வேலைக்கு 30 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.
தேர்வு முறை: எழுத்து, குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 24.9.17
மேலதிக தகவல்களுக்கு: www.nbccindia.com

தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில்பேராசிரியர் பணி!

நிறுவனம்: ஜெய்ப்பூரில் மத்திய
அரசின்கீழ் உள்ள  மாளவியா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி எனும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்
வேலை: பேராசிரியர், இணை பேராசிரியர், உதவிப் பேராசிரியர் வேலை
காலியிடங்கள்: முதல் வேலையில் 31, இரண்டாம் வேலையில் 77, மூன்றாம் வேலையில் 174 இடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ. அல்லது பிஎச்.டி.
வயது வரம்பு: 60க்குள்
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 29.9.17
மேலதிக தகவல்களுக்கு: www.mnit.ac.in

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உதவியாளர் பணி!

நிறுவனம்: தமிழக அரசுப் பணியாளர் தேர்
வாணையமான டி.என்.பி.எஸ்.சி-யின் வேலைவாய்ப்பு அறிவிப்பு
வேலை: தலைமைச் செயலகத்தில் உதவியாளர் வேலையும், புள்ளியியல் பதிவியலில் வேலையும் என இரண்டு பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 85. இதில் உதவியாளர் வேலையில் 54 காலியிடங்களும், புள்ளியியல்
பதவியில் 31 இடங்களும் காலியாக உள்ளன
கல்வித்தகுதி: உதவியாளர் வேலைக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பும், புள்ளியியல் பதவிக்கு புள்ளி
யியல் தொடர்பான பட்டப்படிப்பும் அவசியம்
வயது வரம்பு: உதவியாளர் வேலைக்கு எஸ்.சி. மற்றும் எஸ்.டி. யினர் 35க்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர் 30க்குள்ளும் இருத்தல் வேண்டும். 
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: முதல் வேலைக்கு 26.9.17க்குள்ளும் இரண்டாம் வேலைக்கு 3.10.17க்குள்ளும் விண்ணப்பிக்கவேண்டும்
மேலதிக தகவல்களுக்கு: www.tnpsc.gov.in

மத்திய அரசின் விவசாயத் துறை நிறுவனத்தில் ஸ்டெனோ வேலை!

நிறுவனம்: ஏ.எஸ்.ஆர்.பி (அக்ரிகல்சுரல் சயின்டிஸ்ட் ரெக்ரூட்மென்ட் போர்டு) எனப்படும் மத்திய அரசுக்கான விவசாயம் தொடர்பான பணியாளர்களை நியமிக்கும் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு
வேலை: இரண்டு பிரிவுகளில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒன்று ஸ்டெனோ, இரண்டாவது எல்.டி.சி எனப்படும் லோயர் டிவிஷன் கிளர்க்
காலியிடங்கள்: மொத்தம் 173. இதில் முதல் வேலையில் 95, இரண்டாம் வேலையில் 78 இடங்கள் காலியாக உள்ளன
கல்வித்தகுதி: இரண்டு வேலைகளுக்குமே அடிப்படை கல்வித்தகுதி +2 என்றாலும் இரண்டாவது வேலைக்கு கூடுதலாக தட்டச்சு படிப்பு அவசியம்
வயது வரம்பு: 18 - 27க்குள். சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: எழுத்து, திறன் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.9.17
மேலதிக தகவல்களுக்கு: http://www.asrb.org.in/vacancy

எரிசக்தி துறையில் அசிஸ்டென்ட் எஞ்சினியர் பணி!

நிறுவனம்: எனர்ஜி எஃபிஷியன்சி சர்வீசஸ் லிமிடெட் எனும் எரிசக்தி திறன் தொடர்பான மத்திய அரசு நிறுவனம்
வேலை: மேனேஜர், ஆஃபீசர், எஞ்சினியர் என 9 பிரிவுகளில் காலியிடங்கள் இருந்தாலும் அசிஸ்டென்ட் எஞ்சினியர் கிரேட் II எனும் பிரிவில்தான் அதிகப்படியான காலியிடங்கள் உள்ளனகாலியிடங்கள்: மொத்தம் 138. இதில் அசிஸ்டென்ட் எஞ்சினியர் வேலையில் மட்டுமே 115 இடங்கள் காலியாக
உள்ளன
கல்வித்தகுதி: அசிஸ்டென்ட் எஞ்சினியர் வேலைக்கு எஞ்சினியரிங் அல்லது டெக்னாலஜி படிப்பில் டிப்ளமோ முடித்திருக்கவேண்டும்
வயது வரம்பு: மேற்சொல்லப்பட்ட
எஞ்சினியர் வேலைக்கு 28 வயதுக்குள் இருத்தல் வேண்டும். சில பிரிவினருக்கு வயதில் தளர்வு உண்டு
தேர்வு முறை: எழுத்து, குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.9.17
மேலதிக தகவல்களுக்கு: www.eeslindia.org

பொறியியல் பட்டதாரிகளுக்கு ரெயில்டெல் நிறுவனத்தில் வேலை!

நிறுவனம்: ரெயில்டெல் எனும் மத்திய அரசின் ரயில்வே துறையின் தொலைத்தொடர்புத் துறையில் வேலை
வேலை: அசிஸ்டென்ட் எஞ்சினியர், சீனியர் மேனேஜர் மற்றும் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர் எனும் 3 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 131. இதில் முதல் வேலையில் 86, இரண்டாம் வேலையில் 37, மற்றும் மூன்றாம் வேலையில் 8 இடங்கள் காலியாக உள்ளன
கல்வித்தகுதி: முதல் வேலைக்கு எஞ்சினியரிங் டிப்ளமோ படிப்பும், இரண்டாம் மூன்றாம் வேலைகளுக்கு பி.இ., பி.டெக். அல்லது பி.எஸ்சி படிப்பும்
அவசியம்
வயது வரம்பு: 18 - 38
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 27.9.17
மேலதிக தகவல்களுக்கு: www.railtelindia.com

தொகுப்பு: டி.ரஞ்சித்