புது புது சிந்தனைகள்!



வாசகர் கடிதம்

சமீப காலமாக குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில், ‘குட் டச்…பேட் டச் ’ பற்றிய பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கட்டுரை அவசியமான ஒன்று. குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்களிப்பையும், பொறுப்புணர்வையும் போதிக்கும் விதமான சமூக நலன் கருதும் கட்டுரை அருமை.
- ஆர்.சத்தியநாராயணன், திருச்செங்கோடு

ஆன்லைன் குற்றங்களும் மோசடிகளும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வடிவங்களில் நிகழ்கின்றன. வேலை தேடும் இளைஞர்களுக்கு சுலபமாக சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி மோசம் செய்யும் சமூக வலைத்தளங்களின் செய்திகள் குறித்த கட்டுரை அற்புதம். ஆன்லைன் மோசடியில் பாதிக்கப்பட்ட ஒருவரின் அனுபவத்தோடு ‘ஆன்லைன் மோசடிக்கு ஆளாகாதீர்கள்..!’ என்ற தலைப்போடு பதிவு செய்தது பிரமாதம்.   
- கே. அருண்குமார், மாயவரம்

அரசு மற்றும் தனியார் துறையில் மாதம் முழுதும் ஓடி ஓடி வேலை பார்ப்பதில் விருப்பமில்லாமல் போனாலும், நாமே ஒரு முதலாளி ஆகலாம் என்ற எண்ணம் இருந்தாலும் அவர்களுக்கு நிச்சயம் வழிகாட்டும் சுயதொழில் பகுதியில் வரும் கட்டுரை. ஒவ்வொரு கல்வி-வேலை வழிகாட்டி இதழிலும் இடம்பெறுகின்றது புது புது சிந்தனைகளோடு அருமையான சுயதொழில் வழிகாட்டுதல்கள். உங்கள் சேவை எப்போதும் தேவை!
- எம். மலர்கண்ணன், மதுரை

படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வெவ்வேறு துறையில் பணிபுரிந்த அனுபவத்தோடு வேலை தேடுவோருக்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வழங்கும் இணையவழி இலவச பயிற்சிகள் பற்றிய தகவல்களை தந்தமைக்கு நன்றி. இணையதள சேவை குறித்த முழு விவரங்களும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறையின் ஆணையர் பா.ஜோதி நிர்மலாசாமி தெளிவாக, விவரமாக கூறியிருந்தது சிறப்பு.  
- வி. ஏசுதாஸ்,  நாகர்கோவில்