டியர் டாக்டர்



* ‘காதலிக்க நேரமில்லை’ என்ற பிரபலமான ஒரு திரைப்படத்தின் தலைப்பைத் தேர்ந்தெடுத்து, நுணுக்கமாக, அதேசமயம் பொறியில் தட்டிய மாதிரி இன்றைய நிலையை எடுத்துக் கூறிய ‘கவர் ஸ்டோரி’ ஒவ்வொருவரும் வாசித்து உணர வேண்டிய மகத்தான விழிப்புணர்வு. ‘வணக்கம் சீனியர்’ மூலம் மயக்கத்தைப் போக்கிய குங்குமம் டாக்டருக்கு நன்றி.
- சிம்மவாஹினி, வியாசர் நகர்.  

* ‘மெடிக்கல் ஷாப்பிங்’ பகுதி பயனுள்ள தகவல்களை உள்ளடக்கியிருந்தது. தேவையில்லாத எத்தனையோ பொருட்களை வாங்கி குவிக்கும் நம்மிடம், இதில் கூறப்பட்ட ஒரு மருத்துவ உபகரணம் கூட கைவசம் இல்லையே என வருத்தப்பட வைத்தது. ரிலாக்ஸ் பகுதி இதழ்தோறும் அவசியம் தேவை.
- கஜேந்திரன், வாழப்பாடி.

*வாழைக்கிழங்கில் இப்படிப்பட்ட மருத்துவ மகிமைகளா? எனப் பெரிதும் வியக்க வைத்திருந்தன. வாழைக்கிழங்கினைக் கொண்டு சாம்பார், சூப், பொரியல் ஆகியன செய்து பலன் பெற வழிகாட்டி இருந்த மருத்துவர் ஜூலியட் அவர்களுக்கு நன்றிகள் பல!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.  

*எடையை குறைக்க விரும்புகிறவர்களுக்கான சரியான எச்சரிக்கையைத் தந்திருந்தீர்கள். Crash diet போன்ற விபரீதங்களில் நம்மவர்கள் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற கவலையும் வந்தது. குழந்தைகளைப் பாதிக்கும் குடல் தொற்று’ பற்றி விரிவாகச் சொல்லப்பட்டு இருந்த குறிப்புகள் பெற்றோருக்கான சரியான அறிவுரைகள்.
- காசி விஸ்வநாதன், திருநெல்வேலி.

*‘எலுமிச்சைப் புல் மகிமை’ பற்றிய தகவல்கள் புதிதாக இருந்தது. இனி பலரும் லெமன் கிராஸ் டீக்கு மாறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. செங்கல்பட்டு மருத்துவமனை பற்றிய ரவுண்ட்ஸ் சிறப்பான கவரேஜ்.
- காமேஷ், திருவான்மியூர்.

* ‘பேசாப்பொருளை பேசத்துணிந்தேன்’ என்பது போல துணிச்சலான ஒரு கவர் ஸ்டோரியை வெளியிட்டிருக்கிறீர்கள். தம்பதிகளிடையே இயல்பாக நிகழ வேண்டிய தாம்பத்யம் என்ற புனிதம் இன்று கேள்விக்குறியாக மாறியிருப்பது பற்றிய ஆய்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலை நாடுகளிலேயே மோசமான நிலை இருப்பதையும் தெளிவாக புரிய வைத்தது கவர் ஸ்டோரி.
- கிருஷ்ணன், கிழக்கு தாம்பரம்.