வேட்பாளரின் சொத்து 20 ஆயிரம் புத்தகங்கள்!



நாடாளுமன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் பலர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்துக் கணக்கை தாக்கல் செய்து வரும் சூழலில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா தொகுதிக்காக தாமஸ் ஐசக் என்ற வேட்பாளர் தாக்கல் செய்துள்ள சொத்துக் கணக்கு பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
பத்தனம்திட்டா தொகுதியில் இடதுசாரி கட்சிகளின் வேட்பாளராக நிற்கும் தாமஸ் ஐசக், தனது மிகப்பெரிய சொத்தாக குறிப்பிட்டுள்ளது புத்தகங்களைத்தான்.

தன்னிடம் 20 ஆயிரம் புத்தகங்கள் இருப்பதாகவும், அவற்றின் மதிப்பு 9.6 லட்ச ரூபாய் என்றும் தனது சொத்துக்கணக்கில் காட்டியிருக்கிறார் தாமஸ் ஐசக்.கேரளாவின் முன்னாள் நிதியமைச்சரும், நான்கு முறை எம்எல்ஏவாக இருந்தவருமான தாமஸ் ஐசக்குக்கு சொந்தமாக வீடு இல்லை. தனது சகோதரரின் வீட்டில்தான் தன் புத்தகங்களோடு அவர் வாழ்ந்து வருகிறார்.

20 ஆயிரம் புத்தகங்களைத் தவிர பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருக்கும் 4 லட்ச ரூபாய் சேமிப்பு மட்டும்தான் இவரது சொத்து. இந்த சொத்துகளையும் சுமார் 50 புத்தகங்களை எழுதிதான் சம்பாதித்துள்ளார் தாமஸ் ஐசக்!

காம்ஸ் பாப்பா