அனைத்து செயல்களிலும் வெற்றி பெற



நமோ த்வதன்ய: ஸந்த்ராதா த்வதன்யம்
நஹி தைவதம்
த்வதன்யம் ந ஹி ஜானாமி பாலகம் புண்யரூபகம்
யாவத் ஸாம்ஸாரி கோ பாவோ நமஸ்தேபாவனாத்மனே
தத் ஸித்திதோ பவேத்ஸத்ய: ஸர்வதா ஸர்வதா விபே
நாராயண ஹ்ருதயம்

பொதுப் பொருள்: திருமாலே, தங்களைக் காட்டிலும் என்னைக் காப்பவர் யாரும் இல்லை. புண்ணியமே உருவானவர் நீங்கள். என் மனதில் திடசித்தமாக விளங்கும் தங்களுக்கு நமஸ்காரம். ஜனன, மரண காலங்களுக்கு இடையே நான் ஈடுபடும் அனைத்து செயல்களிலும் வெற்றியை, தாங்கள் எப்போதும், எல்லா வழிகளிலும் அருள வேண்டும். திருமாலே, நமஸ்காரம். இத்துதியை சனிக்கிழமைகளில் பாராயணம் செய்து வந்தால் திருமால் திருவருள் கவசம் போல் நம்மைக் காக்கும்; அனைத்து செயல்களிலும் நாம் வெற்றி காண்போம்.

நோய்கள் நீங்கி தீர்க்காயுள் கிட்ட


ம்ருத்யுஞ்ஜய மஹாபாக பரமதேவ ஸதாஸிவ
கல்பாயுர் தேஹி மே பூர்ணம் யாவதாயுர ரோகதா
பாலாம்பிகேச வைத்யேச பவரோக
ஹரேதிச ஜபேந் நாமத்ரயம்
நித்யம் மஹாரோக நிவாரணம்
அச்யுதானந்த கோவிந்தாய நமோ நம:
ஓம் ஹௌம் ஜும் ஸ: - ம்ருத்யுஞ்ஜய மந்த்ரம்

பொதுப் பொருள்: மரண பயம் கொண்டவர்கள் இத்துதியை தினமும் சாயங்கால வேளைகளில் பாராயணம் செய்து வந்தால் மரண பயம் நீங்கும். நோய்கள் நீங்கி தீர்க்காயுள் கிட்டும். இதில் ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தோடு வைத்தீஸ்வரர், தையல்நாயகி, கோவிந்தன் போன்றோர் நாமங்கள் உள்ளன. மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் இது.

(தினகரன் ஆன்மிக மலர் இதழில் ந.பரணிகுமார் எழுதிய ஸ்லோகங்களின் தொகுப்பு)