கவிதைக்காரர்கள் வீதி



மெரினா

குழந்தைகள்
தாயோடு நடக்கிறார்கள்
சில மனிதர்கள்
நாயோடு கடக்கிறார்கள்
குமட்டுது சொல்ல,
பல இடங்களில் ஆணுறைகள்
அலட்சியமாய் சிலர் கொட்டும்
பிளாஸ்டிக் பைகள்
குடித்து உடைத்த பாட்டில்கள்
என் வயிற்றில் கீறல்
இருளிடம்
சொல்லி அழுகிறேன்
காற்றிடம்
சொல்லித் தொழுகிறேன்
காதலர்கள் வருகிறார்கள்,
காதல் வாழ
மெரினா மண்ணில்
இந்த மெரினா வாழ
கருணை இல்லையா
உங்கள் கண்ணில்

நண்டு எழுதியது

நான் வாழ்வது
கடல் மணலின் குகை
தினம் கேட்கிறேன்
மனிதர்களின் கதை
‘போய் விடாதே!’
- இது நல்ல காதலி
‘போய் விடு!’
- இது கள்ளக் காதலி
மாமியார் தொல்லை
மாமனார் மீறுகிறார் எல்லை
கூட்டுக்குடும்பம் வேண்டாம்
இனி குடும்பமே வேண்டாம்
நன்றாகப் படி!
- இது நண்டு எழுதிய
கால்களின் கோடுகள் அல்ல,
இலக்கிய ஏடுகள்!

-ஈரோடு இறைவன்