jokes



‘‘எந்த நாட்டின் மீது படையெடுக்கலாம் என மன்னர் கேட்டதற்கு, என்ன பதில் சொன்னீர் தளபதியாரே? இப்படி வெலவெலத்துப் போய் நிற்கிறார்!’’ ‘‘கொடநாடு என்று சொன்னேன் மந்திரியாரே!’’

‘‘க்ளைமாக்ஸ்ல வித்தியாசமா ‘மேல் வாய்ஸ்’ல வச்சிருக்கிற ஒப்பாரி ஸாங் செம டச்சிங்கா இருக்கு... யாரோட வாய்ஸ் அது?’’
‘‘வேற யாரு... படத்தோட புரொடியூசர்தான்!’’

‘‘உயிரைப் பணயம் வச்சி தப்பிச்சி வந்ததா அந்த ஆள் சொல்றாரே, தீவிரவாதிங்ககிட்ட சிக்கி இருந்தாரா..?’’
‘‘நீ வேற... உடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரியில அட்மிஷன் ஆகியிருந்து டிஸ்சார்ஜ் ஆனதைச் சொல்றாரு!’’

‘‘இந்தப் போரில் எதிரிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் மந்திரியாரே...’’
‘‘எப்படி மன்னா..?’’
‘‘ஒரு மணி நேரம் ஓடுவது போல ‘அன்பின் மகிமை’ என்ற டாபிக்கில் பவர் பாயின்ட் பிரசன்டேஷன் ரெடி பண்ணி வைத்திருக்கிறேன் மந்திரியாரே!’’

- கே.லக்ஷ்மணன்,
திருநெல்வேலி.