கல்லுக்காக கொள்ளை!



-ச.அன்பரசு

பிரதமர் மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரிலுள்ள வங்கிகளில் இதுவரை 13 கொள்ளை முயற்சிகள் நடைபெற்றுள்ளன. கடந்தாண்டு நவம்பர் 21 முதல் இந்தாண்டு மே 3 வரை நடந்த வங்கிக் கொள்ளை முயற்சியில் திருடப்பட்ட பணத்தின் அளவு ரூ.90.87 லட்சம்.

மக்களின் பணம் பெருமளவு வங்கிகளில் சேமிக்கப்பட்டு விட்டதால், இப்போது தீவிரவாதிகளின் ஒரே குறியாக அதுவே இருக்கிறது. இதனுடன் ராணுவ வீரர்களைத் தாக்கி ஆயுதம் பறிப்பது, பாகிஸ்தான் ஆதரவுடன் இணையத்தில் ‘மால் இ கானிமட்’ என்ற பெயரில் தீவிரவாத பிரசாரம் செய்வது... ஆகியன அங்குள்ள மக்களின் வாழ்வை பதட்டத்திலேயே வைத்துள்ளது.

எஸ்பிஐ, ஆக்சிஸ், ஜே அண்ட் கே, எலாகி டெஹட் உள்ளிட்ட வங்கிகளில் தொடர்ச்சியாக பெருமளவிலான பணம் கொள்ளையடிக்கப்பட்டு, ராணுவ வீரர்களின் மீது கல் வீசி தாக்குபவர்களுக்கு விநியோகிக்கப்படுவது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை எங்குபோய் முடியுமோ தெரியவில்லை...