சஸ்பென்ஷன் டான்ஸ்!



நமக்கு சந்தோஷம் வந்தால் என்ன செய்வோம்? குத்து டான்ஸ் போடுவோமில்லையா? அதேதான் மேற்கு வங்காளத்திலும் பிராக்டிக்கலாக சப் இன்ஸ்பெக்டர் செய்தார். அசன்சாலிலுள்ள ஹிராபூர் போலீஸ் ஸ்டேஷன்தான் சம்பவ இடம். அங்கு கண்துஞ்சாது கடமையாற்றிய சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண சதான் மண்டல் இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

காரணம், அவரை அண்மையில் பர்த்வான் மாவட்டத்திலுள்ள சித்தரஞ்சன் போலீஸ் ஸ்டேஷனுக்கு ட்ரான்ஸ்பர் செய்திருக்கிறார்கள். இதைக் கொண்டாடும் விதமாக சூப்பர் இந்தி குத்துப் பாடலை ஒலிக்கவிட்டு தன் சக போலீஸ் ஆபீசர்களின் கரகோஷத்துடன் குத்து டான்ஸ் ஆடியிருக்கிறார். இதை வீடியோவாகவும் எடுத்திருக்கிறார். இச்செயலை அவரது மேலதிகாரிகள் ரசிக்கவில்லை. அதனால்தான் இந்த சஸ்பென்ஷன்!    

- ரோனி