நாட்டில் குடியேற மானியம்!



அழகிய மலைத்தொடரில் காதைப் பிளக்கும் ஹார்ன் சத்தமின்றி வாழ பலருக்கும் ஆசைதான். டப்பு இல்லாதவர்களுக்கு இது சாத்தியமா? சாத்தியம்தான். எங்கள் மலைக்கிராமத்தில் வந்து தங்குங்களேன் என மக்களை தாம்பூலத்தட்டில் பணம் கொடுத்து ஆசையாக அழைக்கிறது சுவிட்சர்லாந்து அரசு. வாலைஸ் பகுதியிலுள்ள அல்பினென் கிராமம், அங்கு வந்து தங்குபவர்களுக்கு ரூ.45 லட்சம் மானியமாக தருகிறது!

1990ல் இக்கிராமத்தில் இருந்த 380 குடும்பங்கள், இன்று 240 ஆக சுருங்கிவிட்டன. மக்கள்தொகையை அதிகரிக்கவே இந்த மானிய முயற்சி. குடும்பத்தில் குழந்தை இருந்தால் கூடுதலாக ரூ.6 லட்சம் பரிசும் உண்டு. பணத்தை பெற்று டபாய்க்க முடியாது. தங்குபவரின் வயது 45க்குள்ளும், பத்து ஆண்டுகள் குறைந்தபட்சம் அங்கேயே தங்கியிருக்கவேண்டும் என்பதும்தான் முதல் கண்டிஷன்!     

- ரோனி