இந்திய நடிகைகளை வரையும் ஆஸ்திரேலியர்!



உலகமே இந்தியாவை ஆர்வத்துடன் பார்க்கையில் ஆஸ்திரேலியாவின்  ஓவியர் கிரெக் ஃபெர்னாண்டஸ் இந்தியாவே தன் ஓவியத்தை திரும்பிப் பார்க்கும்படி செய்திருக்கிறார். “எனக்கு நானே டீச்சர். விவரம் தெரிஞ்சதுலேந்து வரையறேன். ஒவ்வொரு நாட்டோட கலாச்சாரத்தையும் அடிப்படையா கொண்டுதான் பெயின்டிங் பண்றேன்.

இதுல என்னைக் கவர்ந்தது இந்தியா! 2006ல ராஜா ரவிவர்மா ஓவியங்களைப் பார்த்தேன். மைகாட்... அதுலயும் அவர் வரைஞ்ச ‘A Galaxy of Musicians’ இருக்கே... அப்படியே இன்ஸ்பையராகி இந்திய சினிமா பிரபலங்களை வரைஞ்சேன்...’’ என்று சொல்லும் கிரெக், தனது பாப் பெயின்டிங்ஸ் பற்றி விளக்கினார்.  “அந்தந்த காலகட்டத்தைச் சேர்ந்த இந்திய சினிமா பெண் பிரபலங்களை குழு குழுவா வரைய ஆரம்பிச்சேன்.

இதுல 1960 - 70 நாயகிகள், 80, 90களின் ஹீரோயின்ஸ், பாலிவுட் சினிமா பாடகிகள் குழு... இப்படி விதவிதமா வரைஞ்சேன். ஒவ்வொரு பெயின்டிங்முடியவும் மாசக்கணக்குல ஆகும். எல்லாமே கேன்வாஸ்ல ஆயில் பெயின்டிங் செஞ்சது...’’ என்று சொல்லும் கிரெக், இதே பாணியில் ஹாலிவுட் நாயகிகளையும் வரைந்திருக்கிறார்.    

ஷாலினி நியூட்டன்