COFFEE TABLE



கிஸ்!

புத்தாண்டை சுவிட்சர்லாந்தில் கொண்டாடியுள்ளனர் ப்ரியங்கா சோப்ரா - ஜோனஸ் தம்பதியர். ரோடு ட்ரிப், ரோஜாக்களுடன் கிஸ், பனிச்சறுக்கு விளையாட்டுகள் என ப்ரியங்காவின் இன்ஸ்டா பக்கம் முழுவதும் ரொமான்ஸ் குளுகுளுக்கின்றன. அவரது ரசிகர்களிடமிருந்து, ‘‘Wooow!! Adorable Jonas. Believe me you are the sexiest, hottest and cutest couple alive, and no doubt u both will make the cutiest and beautiful kids...’’ என வாழ்த்து பொக்கேக்களும் குவிந்துள்ளன.

71 வயதில் கடல் சாகசம்!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பைலட் சவின், ஸ்பெயினிலிருந்து அட்லாண்டிக் கடல் வழியாக 4,500 கி.மீ தூரம் பயணம் செய்து கரீபியன் தீவை ஏப்ரல் மாதத்தில் அடையப்போகிறார். இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? சவின் பயணிக்கப்போவது குட்டிக் கப்பல் மாதிரி வடிவமைக்கப்பட்ட ஒரு ஆரஞ்சு பீப்பாயில்! அதுவும் 71 வயதில் தன்னந்தனியாக!

எடை கூட மசால் தோசை!

‘‘உங்களின் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா? தினமும் இரண்டு மசால் தோசை சாப்பிடுங்கள்...’’ என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு.‘‘சாதா தோசையை விட மசால் தோசையை அதிக நேரம் அடுப்பில் வைக்க வேண்டும். எண்ணெயையும் அதிகமாகப் பயன்படுத்த வேண்டும். இதனால் மசால் தோசையில் இயல்பாகவே கொழுப்பு கூடிவிடுகிறது. இந்தக் கொழுப்பே உடல் எடை கூட காரணம்...’’ என்கின்றனர் நியூட்ரிஷியன்கள்.‘‘ஒரு மசால் தோசையில் 400 முதல் 500 கலோரிகள் உள்ளன. அதனால் அளவோடு சாப்பிடுவது நலம்...’’ என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

பாட்டில் பூந்தொட்டிகள்!

வீட்டில் உள்ள காலி பாட்டில்களை கண்ணாடிப் பூந்தொட்டிகளாகவும், ஸ்டேஷனரி பாக்ஸ்களாகவும் வடிவமைப்பது குறித்த வீடியோ பதிவு ஒன்றை ஃபேஸ்புக்கின் ‘Make it easy’ என்ற பக்கத்தினர் பதிவிட்டுள்ளனர். ‘Remember gloves when working with glass’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள இந்த வீடியோவை 7 லட்சம் பேர் பார்த்து வைரலாக்கிவிட்டனர்.

விலை குறைந்த செல்போன்

இந்தியாவில் ‘விவோ நெக்ஸ்’ ஸ்மார்ட்போனின் விலை குறைந்துள்ளது. 6.59 இன்ச் அல்ட்ரா ஃபுல் வியூ டிஸ்பிளே, 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ், 12 எம்பி கேமரா என்று ‘ஐபோன் எக்ஸி’ற்கு சவால்விடும் வகையில் வெளியான இந்த போனின் விற்பனையை அதிகரிக்கவே விலையைக் குறைத்திருக்கிறது ‘விவோ’ நிறுவனம். இப்போதைய விலை ரூ.39,990.  

குங்குமம் டீம்