வீட்டை அகற்ற 15 ஆயிரம் குழந்தைகள் எதிர்ப்பு!



கலிபோர்னியாவில் உள்ள ஹில்ஸ்பாரோவின் அடையாளம் ஃப்ளின்ட்ஸ்டோன் ஹவுஸ்.

இந்த வீட்டை நீங்கள் ஹாலிவுட் படங்களில் பார்த்திருக்கலாம். 1960ல் வரையப்பட்ட ஒரு கார்ட்டூனை மாதிரியாக வைத்து, 1976ல் சிக்கிமுக்கி கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது இந்த வீடு.
உலகப் புகழ்பெற்ற கட்டடக்கலைஞர் வில்லியம் நிக்கோல்சன்தான் இதன் டிசைனர்.
ஒரு பொம்மையின் வடிவத்தில் இருக்கும் இந்த வீட்டின் சுற்றுப்புறத்தை வண்ணமயமான செயற்கை காளான் ஆபரணங்களும், டைனோசர் சிற்பங்களும், விதவிதமான செடிகொடிகளும் அலங்கரிக்கின்றன.

விளைவு... ஒரு சுற்றுலாத்தலமாகவே மாறிவிட்டது இந்த வீடு.குழந்தைகளுக்கு மகிழ்ச்சியூட்டும் இந்த இடத்தை ஃபேங்க் என்பவர் வாங்கி பராமரித்து வருகிறார். சமீபத்தில் ஹில்ஸ்பாரோவின் நகராட்சி ‘ஃப்ளின்ட்ஸ்டோனை அகற்ற வேண்டும், அது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது’ என்று ஃபேங்கிறகு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஃப்ளின்ட்ஸ்டோனைக் காப்பாற்ற 20 ஆயிரம் பேர் நகராட்சிக்குக் கடிதம் எழுதியுள்ளனர். இதில் 15 ஆயிரம் பேர் குழந்தைகள் என்பதுதான் இதில் ஹைலைட்.