அமெரிக்காவில் கொரோனா சிகிச்சைக்கு ரூ.8.14 கோடி!



அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் ஃப்ளோர் என்ற முதியவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இசாகுவா நகரத்தில் உள்ள ஸ்வீடிஷ் மெடிக்கல் சென்டரில் சிகிச்சைக்காக மார்ச் 4ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரது நிலை மோசமாக இருந்ததால் இறந்துவிடுவார் என்று உறவினர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் இறக்கவில்லை.

கொரோனோவுடன் 62 நாட்கள் போராடி முழுமையாக குணமடைந்துவிட்டார். இரண்டு மாதங்கள் சிகிச்சைக்காக மருத்துவமனை அவரிடம் நீட்டிய பில்தான் உலகம் முழுவதும் ஹாட் வைரல். ஐசியூ அறை வாடகை, வென்டிலேட்டர் சார்ஜ் என 3 ஆயிரம் விதமான சேவைகளுக்கு பில்லை தீட்டியிருக்கின்றனர்.

ஒரு புத்தகத்தைப் போல 181 பக்கங்களுக்கு நீளும் பில்லின் மொத்த தொகை 1.1 மில்லியன் டாலர். அதாவது இந்திய மதிப்பில் 8.14 கோடி ரூபாய்! பில்லைப் பார்த்ததும் இதயமே நின்றுவிட்டதாக சொல்லியிருக்கிறார் மைக்கேல் ஃப்ளோர்.

த.சக்திவேல்