ஃபேஸ்புக் போனால் பளார்...பளார்...



அமெரிக்க வாழ் இந்தியர் மணீஷ். சான் ஃபிரான்சிஸ்கோவில் கம்ப்யூட்டர் புரோகிராமராக உள்ளார். பிசியான பிளாக்கர் வேறு. அதே நேரத்தில் முகநூலில் இடைவிடாமல் இயங்கிவந்தார். முகநூலில் ஓர் அடிமை போல செயல்பட்டு வந்ததால் தன்னுடைய வேலையை அவரால் சரியாக செய்யமுடியவில்லை. மூளையைக் கசக்கிப் பிழிந்து முகநூலிலிருந்து வெளியேற அவர் கண்டுபிடித்த ஒரு செயல்திட்டம்தான் இன்று செம வைரல். ஆம்; மணீஷ் முகநூலை லாக்-இன் பண்ணுகிறாரா என்று கண்காணிப்பதற்காகவே கிளாரா என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தினார்.

தப்பித்தவறி மணீஷ் முகநூலில் நுழைந்தால் அவர் கன்னத்தில் பளார், பளார் என்று அறைய வேண்டும் என்பதுதான் கிளாராவுக்குக் கொடுக்கப்பட்ட பணி! கிளாராவை வேலைக்கு அமர்த்திய பிறகு தன்னுடைய வேலை நேரம் பலமடங்கு உயர்ந்திருப்பதாக மணீஷ் சொல்கிறார். இந்த வேலையைச் செய்வதற்காக கிளாராவுக்குக் கொடுக்கப்படும் ஒரு மணி நேர சம்பளம் 8 டாலர். அதாவது 600 ரூபாய்! மணீஷின் விநோத திட்டத்தை உலகின் பெரும் பணக்காரரான எலன் மஸ்க் பகிர, செம வைரலாகிவிட்டார்.

த.சக்திவேல்