ராசி பலன்!



உன்னோட சிவகாமி என்னோட ராசிக்கு கரெக்ட்டா பலன் சொல்லுமா..?
: சொல்லும் கேட்டுப்பாரு...
- சரி குடு கேட்டுப் பாப்போம்...
காதில் மாட்டிக் கொள்கிறேன். குரல் ஒலிக்கத் தொடங்குகிறது...
- நீ ஜான் ஏறுனா முழம் சறுக்கும்...
- ஆமாப்பா...

- உன் சம்பளம் 10ம் தேதிக்குள்ளயே தீந்துடும்...
- ஆமாம்ப்பா...
- உன் பாக்கெட்ல எப்பவுமே சில்லறை இருக்கும். ஆனா, சிட்டி பஸ்ல ஏறும் போது மட்டும் சில்லறை இருக்காது. சரியா..?
- சரிப்பா...
- ரயில் ரிசர்வேசன்ல உனக்கு எப்போதுமே லோயர் பெர்த் கிடைச்சதில்லை. சரியா..?
- சரிப்பா...
- பொண்டாட்டிட்ட உனக்கு எப்பவுமே நல்ல பேர் இருக்காது. சரியா..?
- சரிப்பா...

- உன் புள்ளைங்களோட ஸ்கூல் டீச்சர சைட் அடிப்ப. சரியா..?
- சரிப்பா...
- கோயில்ல நீண்ட கியூல நின்னு நீ கையை நீட்டும் போது கரெக்ட்டா புளியோதரை தீந்து போயிருக்கும். சரியா..?
- சரிப்பா...

- நீ பாஸ் புக் கொண்டு போகும் போது மட்டும் பேங்க்ல பிரிண்டர் வேல செய்யாது. சரியா..?

- சரிப்பா... சரி... மீன ராசி ரேவதி நட்சத்திரத்துக்கு இவ்வளவு துல்லியமா சொல்றியே... நீ உண்மையிலேயே கிரேட்பா...

- யோவ் பேக்கு... ரொம்ப ஃபீல் பண்ணாத. இது மீன ராசி, ரேவதி நட்சத்திரத்துக்கு மட்டுமில்ல... 12 ராசி... 27 நட்சத்திரத்துக்கும் பொருந்தும். காதுல மாட்டிருக்குறத கழட்டி கொடுத்துட்டு போயிட்டே இரு...

பொம்மையா முருகன்