டீஈஈஈஈ!



-மச்சி... நாயர் கடைக்கு வந்தோமா... டீயை ஆர்டர் செஞ்சோமா... மீன் டைம்ல நியூஸ் பேப்பர படிச்சோமா... டீ வந்தவுடன உறிஞ்சிட்டு  கெளம்புனோமான்னு இருக்கணும். இப்படி டீயை குடிக்காம வெறிச்சாப்ல ஒக்காந்திருக்கக் கூடாது...
- ப்ச்... 

- மச்சி... என்னடா ஆச்சி? திடீர்னு சோகமாயிட்டே?
- இல்லடா... காலைலேயே நா ரொம்ப அப்செட்... 
- அப்செட்டா..?
- ஒரு புருஷன் பொண்டாட்டி ஜோடி, லெட்டர் கிட்டர் எழுதி வைக்காம தற்கொலை பண்ணிகிட்டா அதுக்கு என்ன காரணமா இருக்கும்..?
- நியூஸ் பேப்பர பாத்தியாக்கும்..? என்ன அவங்க சூசைட்டுக்கு குடும்பச் சிக்கல் காரணமா இருக்கலாம்...
- அதுக்கு சான்ஸ் கிடையாது. வேற..?

- அந்த ஜோடில யாரோ ஒருத்தருக்கு தீராத வியாதி இருந்திருக்கலாம். அந்த வியாதியால ஒருத்தருக்கொருத்தர் பிரிஞ்சிடுவோமோங்கிற பயத்துல கூட தற்கொலை பண்ணிருந்திருக்கலாம்...
- நீ  டிவி சீரியல்ஸ் பாத்து ரொம்ப கெட்டுப் போயிட்டடா... அவங்க ரெண்டு பேருமே ஹெல்த்திதான்...
- அப்ப கந்துவட்டி கொடுமையா இருக்கலாம்...

- கண்டிப்பா கிடையாது. அவங்க கந்துவட்டி வாங்குற ஆளுங்க கிடையாது... ஏன்னா அவங்களுக்கு நிதி சிக்கல்ன்னு ஒண்ணு கிடையவே கிடையாது...

- அதுவும் இல்லன்னா அவங்க பெத்து வளத்த பொண்ணு சொல்லாம கொள்ளாம யார்கூடவாவது ஓடிருக்கும். அந்த அவமானம் தாங்காம தற்கொலை முடிவ எடுத்திருந்திருக்கலாம்...
- அட அவங்க அந்த மாதிரி எமோஷனல் டைப்லாம் கிடையாதுடா...

- அதுவும் இல்லையா... அப்ப சூசைட் பண்ணிக்கிறோம்னு வேண்டிருப்பாங்க..! அதனால சூசைட் பண்ணிருப்பாங்க.
- என்னடா இப்படி சொல்லிட்ட..?
- பின்ன என்னடா... அவங்க யாரு... எந்த ஊர்ல இறந்தாங்கன்னு சொல்லு. கூகுள் போட்டு 
பாத்திடலாம்...

- கூகுள்ல எல்லாம் தேட வேண்டாம். நேர்லயே காட்றேன்...
- நேர்லயா..?
- ஆமா...

- எங்க..?

- இதோ இந்த டீ யில... ரெண்டு ஈ ஒருத்தர ஒருத்தர் பிரியாம ஜோடியா விழுந்து செத்துக் கிடக்கு பாரு...
- டேய்... ‘அவன் கூடலாம் சேராதடா... திடீர்னு பிடிச்சி கடிச்சி வச்சிடுவான்’னு எங்க அப்பாத்தா கெழவி சொல்லிச்சி... ஆனா, நான்தான் கேக்கல. இப்ப அனுபவிக்கறேன்...

பொம்மையா முருகன்