கவிதைக்காரர்கள் வீதி
 
 
  சதிராடல்
  ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இன்னும் உருண்டு கொண்டுதான் இருக்கின்றன சகுனியின் தாயக்கட்டைகள்!
 
  பாலு விஜயன்
  தவம்
  உருட்டிப் பிடித்த  களிமண்ணை  சிறுகுச்சி உடைத்துக் கீறிய  குழந்தையின் கைகளில் கண் திறந்தார் கடவுள். 
 
  கொ.மா.கோ.இளங்கோ
   பூச்சாண்டிகள்
  கடைசி வரையிலும் அறிமுகம் ஆகாமலேயே இருந்து விடுகிறார்கள் குழந்தைப் பருவத்தின் பூச்சாண்டிகள்.
 
  கி.சார்லஸ்
  
  
 |