செவிலியரை தீவிரவாதிகளிடம் இருந்து மீட்ட மோடிக்கு விஜயகாந்த் நன்றி - செய்தி தீவிரவாதிகளோடு தொடர்ந்து போராடிக்கிட்டு இருக்க உங்களுக்குத்தாங்க இதோட அருமையும் சூட்சுமமும் தெரியும் கேப்டன்...
மனுஷ்யபுத்திரன்

முன்ன எல்லாம் இடி இடிச்சா மரத்துக்கு கீழ் நிக்குறவன் எல்லாம் ஓடிப் போயி கட்டிடத்துக்குக் கீழ நின்னுக்குவான்; இப்ப என்னடான்னா, கட்டிடத்துக்கு உள்ள இருக்குறவன் எல்லாம் ஓடிவந்து மரத்துக்குக் கீழ நின்னுக்குறான்!
- இளையராஜா டெண்டிஸ்ட்
சந்தோஷத்தை சிறைப்படுத்தாதே... வெளிப்படுத்திக் கொண்டே இரு!
- விசாலி ஸ்ரீராம்
உலக அதிசயமென்றாலும் அதனை தினசரி கடப்பவருக்கும் பார்ப்பவருக்கும் என்னவோ அது சாதாரண கட்டிடம்தான்...
- வடுவூர் ரமா
நேற்று பெய்த மழையில் மூலிகைச் செடிகளும் முளைக்கலாம்.
- தீபா நாகராணி
சில உறவுகளை இணைந்திருந்து அழகாக்கு
கிறோம்; சில உறவுகளைப் பிரிந்திருந்து இன்னும் அழகாக்குகிறோம்!
- இந்திரா கிறுக்கல்கள்
ஷரபோவாவுக்கு சச்சினைத் தெரியவில்லை!
# சச்சின் நல்லவருன்னு இப்போ தெரியுதா? ஸ்ரீசாந்த் பேரைச் சொல்லிப் பாருங்க, ‘அந்தப் பயலா’ன்னு கேட்கும்...
- மதன் செந்தில்
நாலு
பேரைக் கேள்வி கேட்கும் நிலையிலுள்ள எவனும், வேறு யாராவது நாலு பேருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்!
-செல்லமுத்து குப்புசாமி
செல்லாத இடங்களில்
சாலைகள் அமைத்திருக்கிறது சிலந்தி
கௌதமன் டிஎஸ் கரிசல்
குளத்தான்
லாரில ஹாரன் வச்சிருக்கானுங்களா, ஹைடெசி பல் ஆர்மோனியப் பொட்டி வச்சிருக்கானுங்களான்னே தெரியல...
# வாசிக்கிறானுக.
- பிரபல எழுத்தாளர் முத்துராம்
இன்று நகரத்தில் நாயை வாக்கிங் கூட்டிச் செல்லும் பழக்கம்... அன்று கிராமத்தில் மாட்டை தண்ணி காட்ட அழைத்துச் சென்றதன் பரிணாம 
வளர்ச்சியே..!
வெங்கடேஷ் ஆறுமுகம்
இறைவா!
மணல் லாரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்...
ஷேர் ஆட்டோக்களிடம் இருந்து என்னைக் காப்பாற்று!
சின்சுலா ரிஷ்நியாட்டி
ஆதாம் ஏவாள் இப்ப இருந்திருந்தா, ஆப்பிள் பறிக்கும்போது செல்ஃபி எடுத்திருப்பாங்க!
-ஜெயராஜ் பாண்டியன்
twitter வலைப்பேச்சு
@suryanashok    
  வயிற்றுக்கு உள்ளே விழுந்த குப்பையே, தொப்பையாகிறது.
@sudarkodii    
மேகத்தின்   சாயம் மழையால் வெளுக்கிறது!
@arasu  1691     
‘மாப்பிள்ளை குடிப்பாரா’ங்கற கேள்வி நம்ம சமூகத்துலருந்து காணாமயே போயிடுச்சு...
@KalaiLalitha   
பெருத்த ஏமாற்றம் என்பது உடல் குண்டாகிவிடுவது!
@CarbonKaradi      
‘குரங்கிலிருந்து மனிதன்’ எனும் பரிணாம வரைபடம் ஆணை மட்டுமே காட்டுவதன் நுட்பம் கண்டீர்களா!?
@Noorul  _tweets  
கட்டிட விபத்துகள், திருடப்பட்ட ஆற்று மணலின் சாபமாகக் கூட இருக்கலாம்.
@KediJilla2  
18 வழிகளில் உதவியாக இருந் தால் அது டேபிள்மேட்; 18 வழிகளில் தொந்தரவாக இருந்தால் அது ரூம்மேட்...
@Elanthenral    
சொர்க்கத்தில்   என்ன இன்பம் என்று தெரியாது... நரகத்தில் யார் யார் இருக்கிறார்கள் என்று சொல்லி விடுங்கள்... 
# அதான் உண்மையான இன்பம்!
@VenkysTwitts    
நம்மகிட்ட   இருக்க காந்தி நோட்ட பூரா அவன் கேலக்ஸி நோட்டா மாத்தாம விட மாட்டான் போல இந்த சாம்சங் கம்பெனிக்காரன்.
@kanapraba      
எதுவும் கடந்து போகும் எனத் 
தெரிந்தவன், உதை 
பந்தாட்டத் தில் தோற்று விடுவான்!
@barathi  _  
மிதந்து இறங்கும் இலை.
பாதிக்கண் திறந்து உறங்கும் பூனை.
எப்போதோ விடுதலையாகிப் பறந்து 
கொண்டிருக்கும் பட்டம்.
கடப்பவர் பலர்; கவனிப்பது சிலர்!
@AmmU_MaanU  
தில்   இருந்தா ‘‘புரட்சித்தலைவி அம்மா யாரு’’ன்னு ஷரபோவா கேட்டு விட்டு தமிழ்நாட்டு பக்கம் வரட்டும், பார்ப்போம் 
# தமிழன்டா
@iyyanars   
  இதே மரியாவுக்கு விஸ்வநாதன் ஆனந்தை தெரியாதுன்னு சொல்லச் சொல்லுங்கய்யா பார்ப்போம்! தக்காளி... அங்க நிக்குறான்யா தமிழன்!
@senthilcp    
  செல்போனில் ஓட்டுப் போடும் காலம் வர வேண்டும்: அப்துல் கலாம் கனவு.
# ஆண்ட்ராய்டு போன் இலவசமா தரும் கட்சிக்கே என் ஓட்டு என எதிர்பார்ப்பான்!