வேலை ரெடி!




வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும்
இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.
இந்த இரண்டு வாரங்களில் வெளியான
முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

வங்கியில் ஆபீஸர் பணி

நிறுவனம்: இந்தியாவின் முதன்மையான பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
வேலை: ப்ரொபேஷனரி ஆபீஸர்
காலியிடங்கள்: 1837. (இதில் பொதுப்பிரிவினருக்கு 758, ஓ.பி.சி - 405, எஸ்.சி - 235, எஸ்.டி - 439)
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
வயது வரம்பு: 21 முதல் 30 வயதுக்குள். (இதில் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டு, எஸ்.சி-எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டு, உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டு தளர்ச்சி)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 25.4.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.sbi.co.in

பட்டதாரிகளுக்கு ஏர் இந்தியாவில் வேலை

நிறுவனம்: இந்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ‘ஏர் இந்தியா விமான சேவை’ (ஏ.ஐ.ஏ.டி.எஸ்.எல்)
வேலை: செக்யூரிட்டி ஏஜென்ட்
காலியிடங்கள்: மொத்தம் 271. (இதில், 160 பணியிடங்கள் மேற்கு மண்டலம், தெற்கு மண்டலத்துக்கு உரியது. இந்த பணியிடங்கள் நேர்முகத்தேர்வு மூலமே நிரப்பப்படும். மீதமுள்ள 111 இடங்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு கிளைகளுக்கான இடங்கள். இவை எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்படும்.)

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரியுடன், ஆங்கிலமும், மாநில மொழியும் தெரிந்திருக்க வேண்டும். இதோடு என்.சி.சி சான்றிதழ், கணினியில் ஏதேனும் ஒரு படிப்பு இருந்தால் கூடுதல் தகுதி.
வயது வரம்பு: 28க்குள் இருத்தல் அவசியம். (இதில் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டும், எஸ்.சி-எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டும் வயது தளர்ச்சி உண்டு.)
உடல் தகுதி: ஆண்கள் குறைந்தபட்சம் 165 சென்டிமீட்டர் உயரமும், பெண்கள் குறைந்தபட்சம் 153 சென்டிமீட்டர் உயரமும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 28.4.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக
தகவல்களுக்கு: www.airindia.in

டாக்டர்களுக்கு அரசு வேலை

நிறுவனம்: மத்திய அரசுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்யும் யு.பி.எஸ்.சி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம்.
வேலை: கம்பைண்டு மெடிக்கல் சர்வீஸஸ் எனப்படும் ஒருங்கிணைந்த மருத்துவ சேவைப் பணிக்கான தேர்வு
காலியிடங்கள்: 875 (இவை 5 துறைகளில் நிரப்பப்படும்)
கல்வித் தகுதி: எம்.பி.பி.எஸ்

வயது வரம்பு: 32க்குள்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 21.4.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.upsconline.nic.in
எஞ்சினியர்களுக்கு அரசு வேலை

நிறுவனம்: மத்திய அரசுக்கு தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்யும் யு.பி.எஸ்.சி
வேலை: எஞ்சினியர். எஞ்சினியரிங் சர்வீசஸ் தேர்வு மூலம் இந்தப் பணிகள் நிரப்பப்படும்.
காலியிடங்கள்: 582. இந்த இடங்கள் 4 பிரிவுகளில் நிரப்பப்படும். அவை... சிவில் எஞ்சினியரிங், மெக்கானிக்கல் எஞ்சினியரிங், எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன்.

கல்வித் தகுதி: அந்தந்த பிரிவுகளில்
எஞ்சினியரிங் டிகிரி
வயது வரம்பு: 21 முதல் 30 வரை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 21.4.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக
தகவல்களுக்கு: www.upsconline.nic.in
ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு அரசு வேலை

நிறுவனம்: கேரள மாநிலம் கோட்டயத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹிந்துஸ்தான் நியூஸ்பிரின்ட் லிமிடெட்
வேலை: ஃபிட்டர், டர்னர், மெக்கானிக், மெஷினிஸ்ட், எலெக்ட்ரீஷியன், வெல்டர் போன்ற இன்னும் பிற பணிகள்...
காலியிடங்கள்: 114

கல்வித் தகுதி: மேற்குறித்த துறைகளில் ஐ.டி.ஐ படிப்பு
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 30.4.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.hnlonline.com

பத்தாம் வகுப்பு
படித்தவர்களுக்கு
ரிசர்வ் வங்கி வேலை

நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கியின் பாட்னா மண்டல அலுவலகம்
வேலை: செக்யூரிட்டி கார்டு
காலியிடங்கள்: 11
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 25க்குள்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 30.4.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.rbi.org.in

அரசு சுரங்கத் துறையில் வேலை

நிறுவனம்: எம்.இ.சி.எல் எனப்படும் அரசுப் பொதுத்துறை நிறுவனமான மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட்
வேலை: அசிஸ்டென்ட் மேனேஜர், ஃபோர்மென், டெக்னீஷியன், மெக்கானிக் மற்றும் டிரைவர்
காலியிடங்கள்: 153.
கல்வித் தகுதி: ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 23.4.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: mecl.gov.in

அரசுத் துறையில் ஆராய்ச்சியாளர் பணி

நிறுவனம்: இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வு நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர் (கவுன்சில் ஆஃப் சயின்டிஃபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் அமைப்பு)
வேலை: ஆராய்ச்சியாளர், முதுநிலை ஆராய்ச்சியாளர், முதன்மை ஆராய்ச்சியாளர் மற்றும் முதுநிலை முதன்மை ஆராய்ச்சியாளர்
காலியிடங்கள்: 20
கல்வித் தகுதி:
எம்.இ / எம்.டெக் படித்தவர்கள், ஆர்கானிக் கெமிஸ்ட்ரி / கெமிஸ்ட்ரி படித்தவர்கள் மற்றும் பிஎச்.டி படித்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 28.4.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக
தகவல்களுக்கு: www.iip.res.in